நானே வருவேன் பார்த்த தனுஷ்… முட்டிக்கொண்ட அண்ணன் தம்பி- பரிதாப நிலையில் தயாரிப்பாளர்
தற்போது நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் மற்றும் தி கிரே மேன் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். பல படங்களில் பிஸியாக நடித்து வந்த போதிலும் தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கி அந்த படத்துக்கு கதையையும் தானே எழுதினார்.
இந்த படத்தின் மூலம் செல்வராகவன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தனது தம்பி தனுஷை இயக்கி முடித்துள்ளார். இவர்களது, கூட்டணியில் ஏற்கனவே காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.,
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். மேலும், தனுஷுக்கு ஜோடியாக இளம் நடிகை இந்துஜா நடித்துள்ளார். வழக்கமாக செல்வராகவன் படங்கள் போல இல்லாமல் திட்டமிட்டபடி இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.
இதையடுத்து எடிட்டிங் பணிகள் முடிந்த நிலையில் படத்தை தனுஷுக்கு திரையிட்டு காட்டியுள்ளார்கள். ஆனால் படத்தின் உருவாக்கத்தில் அவருக்கு திருப்தி இல்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் தான் நினைத்தவாறு கதை படமாக்கப்படவில்லை என்றும் அவர் செல்வராகவனிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக அண்ணன் தம்பி இருவருக்கும் மோதல் எழ, கலைப்புலி தாணு எப்படியாவது படத்தை முடித்து ரிலீஸ் செய்யவேண்டும் என இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.