பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்!?தர்ம அடி கொடுத்த பொது மக்கள்!?

Photo of author

By Parthipan K

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்!?தர்ம அடி கொடுத்த பொது மக்கள்!?

Parthipan K

Many days the thief will be caught one day!?

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்!?தர்ம அடி கொடுத்த பொது மக்கள்!?

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகாவில் திருப்பனந்தாள் ஒன்றியம் தெருவில் வசித்து வருபவர் ஜெயவேல். இவர் தன் வீட்டில் மொபைலுக்கு சார்ஜ் போட்டுவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டார். ஜெயவேல் கடைக்கு சென்று இருந்த நிலையில் திடீரென்று மர்ம நபர் ஒருவர் சார்ஜ் போட்டு இருந்த செல்போனை தூக்கிச் சென்று ஓடியுள்ளார் .

இதை கண்ட கடையிலிருந்த ஜெயவேல் மற்றும் அப்பகுதி மக்கள் அவரைத் துருத்தி பிடித்து  தர்ம அடி கொடுத்தனர். பிறகுஜெயவேல்  திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இதைத்தொடர்ந்து காவல்துறையினர் திருடி சென்ற வாலிபரை விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் கும்பகோணம் முத்தையாபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. மேலும் அவரிடமிருந்து இரண்டு ஆண்ட்ராய்டு மொபைல்கள் மற்றும் சாதாரண போன்கள்  என இன்று மட்டும்  மூன்று செல்போன்களை திருடி  சென்று இருக்கிறார் என்பது தெரிய வந்தது. இதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.