பண்ணிடாதீங்கமாதம் 70 ஆயிரம் ரூபாய்! அரசு வேலை மிஸ் பண்ணிடாதீங்க!உடனே விண்ணப்பியுங்கள்!
துணை மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப பவர் கிரிட் ஆணையத்திலிருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என மொத்தம் 32 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பவர் கிரிட் ஆணைய வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. துணை மேலாளர் பணிக்கு 17 பணியிடங்கள் உதவி மேலாளர் பணிக்கு 15 பணியிடங்கள் என மொத்தமாக 32 பணியிடங்கள் காலியாக உள்ளது. விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு முதுகலை பட்டம் படித்தவராக இருக்கலாம் என கருதப்படுகிறது. கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
துணை மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 36 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சமாக 33 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் துணை மேலாளர் பதவிக்கு ரூ.70,000 மற்றும் உதவி மேலாளர் பதவிக்கு ரூபாய்60,000 சம்பளம் வழங்கப்பட உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பக் கட்டணமாக முன்னதாக ரூ.500 செலுத்த வேண்டும்
இவ்வகை வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை காணலாம்.தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இன்றே கடைசி நாள் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பியங்கள்.