கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

0
218

கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

கலகலப்பும், கண்டிப்பும் கொண்ட கன்னி ராசி அன்பர்களே…!ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் கன்னி ராசிக்கு அஷ்டம ஸ்தானம் என்னும் எட்டாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் கன்னி ராசிக்கு குடும்ப ஸ்தானம் என்னும் இரண்டாம் இடத்திற்கும் பெயர்ச்சி அடைந்தார்.

ராகு கேது பெயர்ச்சியின் பலன்கள் :முன்கோபத்தை விடுத்து பொறுமையாக செயல்படுவதன் மூலம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக்கொடுத்து செல்லவும்.

முக்கியமான முடிவுகளை சிந்தித்து எடுக்கவும். வேகம் என்பதை விட விவேகம் மிகவும் அவசியம் ஆகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் கருத்துக்கள் கூறுவதை குறைத்து கொள்ளவும். உடன்பிறந்தவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.

ராகு கேது பெயர்ச்சியினால் பொருளாதார நிலை: தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். எதிர்பாராத சில உதவி கிடைக்கும். எதிர்பார்த்த தனவரவு கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். ஆடம்பர சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது. வழக்கு நிமிர்த்தமாக சில விரயங்கள் உண்டாகும்.

ராகு கேது பெயர்ச்சியினால் உடல் மற்றும் ஆரோக்கியம் :ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் படிப்படியாக குறையும். நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்து கொள்ளவும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும்.

ராகு கேது பெயர்ச்சி பெண்களுக்கு :சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் காலதாமதத்திற்கு பின்பு நடைபெறும். கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். விலையுயர்ந்த பொருட்களை கையாளுவதில் விழிப்புணர்வு வேண்டும். குழந்தைகள் வழியில் இருந்துவந்த மனவருத்தம் மற்றும் கவலைகள் குறையும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்லவும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

 

ராகு கேது பெயர்ச்சி மாணவர்களுக்கு :மாணவர்களுக்கு பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். கிடைக்கும் சிறு வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்தி கொள்ளவும். ஒருவிதமான தயக்க உணர்வுகள் குறையும். புதுவிதமான சிந்தனைகள் அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.

 

ராகு கேது பெயர்ச்சியினால் ஏற்படும் நன்மைகள் :ராகு கேது பெயர்ச்சியின் மூலம் இழுபறியான நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டாகும்.

 

கவனம் தேவை :மற்றவர்களிடம் பேசும்போது பேச்சுக்களில் கனிவும், கவனமும் வேண்டும்.

வழிபாடு முறை :செவ்வாய்க்கிழமைதோறும் முருகப்பெருமானை வழிபாடு செய்துவர இழுபறியான சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

Previous articleமாதம் 70 ஆயிரம் ரூபாய்! அரசு வேலை மிஸ் பண்ணிடாதீங்க!உடனே விண்ணப்பியுங்கள்!
Next article17 வயசில் ஹீரோயின் லுக்கில் அனிகா சுரேந்திரன்?! ஹீரோயினிகளுக்கே டாப் கொடுக்கும் கியூட் போஸ்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here