புதிய சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவரை அறிவித்த எடப்பாடி பழனிசாமி 

0
188

புதிய சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவரை அறிவித்த எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவராக அதிமுக முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து  இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், சென்னை, ஆழ்வார்பேட்டை, TTK சாலை, கிரவுன் பிளாசா சென்னை அடையார் பார்க் ஹோட்டலில் 17.07.2022 – ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு, கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி மு. பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கட்சியின் சார்பில், சட்டமன்றக் கட்சித் துணைத் தலைவராக முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமாரும், துணைச் செயலாளராக, முன்னாள் அமைச்சரும், போளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தியும், கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் அதில் கூறியுள்ளார்.

Previous articleயாரோ செய்த தவறுக்கு மக்களை தண்டிப்பதா? மருத்துவர் ராமதாஸ் கேள்வி  
Next articleடமால் என்ற சத்தம் கேட்டதால் வானத்தை பார்த்த பொதுமக்கள்! இதுதான் விஷயமா?