உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன்: எத்தனையாவது இடம் தெரியுமா?

0
91

உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன்: எத்தனையாவது இடம் தெரியுமா?

உலகின் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான போர்ப்ஸ் பத்திரிகை சமீபத்தில் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம்பெற்றுள்ளார். நிர்மலா சீதாராமன் இந்தப் பட்டியலில் 34வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் இங்கிலாந்து ராணி எலிசபெத் 40 ஆவது இடத்தில் உள்ளதை அடுத்து அவரை நிர்மலா சீதாராமன் முந்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த பட்டியலில் முதலிடத்தில் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் உள்ளார். இதனை அடுத்து பிரான்ஸ் நாட்டின் கிரிஸ்டின் லகர்தே இரண்டாவது இடத்திலும், அமெரிக்காவின் நான்சி பிளவுசே மூன்றாவது இடத்திலும், பெல்ஜியம் நாட்டின் உர்சுலா வோன் டெர் நான்காவது இடத்திலும் அமெரிக்காவின் மேரி பாரா ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்

அதேபோல் பில்கேட்ஸ் மனைவி மெலிண்டாகேட்ஸ் ஆறாவது இடத்திலும், அமெரிக்காவின் அபிகெய்ல் ஜான்சன் 7வது இடத்திலும், ஸ்பெயின் நாட்டின் ஆனா பாட்ரிகா 8வது இடத்திலும் அமெரிக்காவின் கின்னி ரோமடி 9ஆவது இடத்திலும் அமெரிக்காவின் மர்லின் 10-வது இடத்திலும் உள்ளனர். மேலும் இந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஷிவ் நாடார் அவர்களின் மகள் ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா 54வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.