ஜார்கண்ட் தேர்தல்…. வாக்களித்த தோனி!

0
206

ஜார்கண்ட் மாநிலத்தில் 17 தொகுதிகளுக்கு மூன்றாவது கட்ட தேர்தல் நடந்தது வாக்குப்பதிவு அமைதியாக நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஜர்காண்ட் மாநிலத்தின் 81 தொகுதிகளுக்கு 5 கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
கடந்த மாதம் 30ஆம் தேதி முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது இம்மாதம் 7ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது.

ஜார்கண்ட் தேர்தல்.... வாக்களித்த தோனி!

இந்த நிலையில் நேற்று 17 தொகுதிகளில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது 17 தொகுதிகளிலும் 32 பெண்கள் உட்பட 350 வேட்பாளர் போட்டியில் போட்டியிட்டனர் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர் நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் காரணமாக ஓட்டுப்பதிவு நடந்த எட்டு மாவட்டங்களிலும் வரலாறு காணாத பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தன் மனைவியுடன் ராஞ்சியில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். மாலை 5 மணி நிலவரப்படி 62.35 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன அமைதியான முறையில் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.

நான்காம் கட்ட தேர்தல் 17ஆம் தேதியும் ஐந்தாம் கட்ட தேர்தல் 20ஆம் தேதியும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஉலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன்: எத்தனையாவது இடம் தெரியுமா?
Next articleஇந்திய-வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சென்னை வருகை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here