Breaking News, District News, Education

இந்த பள்ளிகளுக்கு ஏன் பாடப் புத்தகம் வழங்கவில்லை? ஏழைக் குழந்தைகளின் மனநிலை என்ன? கருணை காட்டுமா பள்ளி கல்வித்துறை?..

Photo of author

By Parthipan K

இந்த பள்ளிகளுக்கு ஏன் பாடப் புத்தகம் வழங்கவில்லை? ஏழைக் குழந்தைகளின் மனநிலை என்ன? கருணை காட்டுமா பள்ளி கல்வித்துறை?..

கோவை மாவட்டத்தில் சுமார் 1100 அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகள் எளிதில் கல்வி கற்பதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக ஏற்பட கூடாது என சீருடை,புத்தகம் நோட்டு,பேனா,  ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்ற பல  தேவையான உபகரணங்கள் அரசு சார்பில் ஆண்டுதோறும் இலவசமாக  கொடுக்கப்பட்டு வருகின்றது.

இவைகளின் மூலம் மாணவச் செல்வங்களின் கல்வி பாதியிலேயே விடும் நிலை தவிர்க்க உதவுகின்றது. நடப்பாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்ட பின் பாடப் புத்தகங்கள் மற்றும் நோட் புக்குகள் என அனைத்தும் வழங்கப்பட்டு வருகின்றது. அதேசமயம் மேற்கூறியபடி இலவச பொருட்கள்  அனைத்து வழங்கப்படாமல் உள்ளது. இதனால் ஏழை மாணவர்கள் அனைவரும் கல்விக்கு தேவையான உபகரணங்கள் இல்லாமல் பலர் தவித்து வருகின்றனர்.

இதனால் சில குழந்தைகள் கல்வி கற்க முடியாமல் பாதியில்  நிற்கின்றனர். இதுகுறித்து ஆசிரியர் சங்கத்தினர் தெரிவிக்கையில், பள்ளிகள் திறக்கப்பட்டு பல நாட்ளாகியும் இன்றும் சில மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் பற்றாக்குறையாகவே இருக்கிறது.இதைத்தொடர்ந்து ஐந்து பாடங்களுக்கும் சேர்த்து ஓரிரு பாடப் புத்தகமே வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் தற்போது பாடங்கள் நடத்தப்பட்டிருக்கும் போது ஆசிரியர்கள் எழுத்து பயிற்சி அளிக்க துவங்கியுள்ளனர். பாடம் நடத்தும் போது குறிப்புகள் எடுப்பது மற்றும் கரும்பலகையில் எழுதுவதை எழுதிக் கொள்ளவும் நோட்டுகள் மிக அவசியமாக தேவைப்படுகின்றது. இன்னும் சில நாட்கள் போனால் பள்ளி கல்வித்துறை ஏன் பாடம் முடிக்கவில்லை என்று கேள்வியும் எழுப்பி விடும்.

இதில் கருத்தில் கொண்டு நாங்கள் மாணவர்களை தேவையான நோட்டுக்களை வெளிக்கடையிலேயே வாங்கி வர வேண்டும் என்று மாணவர்களுக்கு  கோரிக்கை விடுத்தோம். முதன்மை மாவட்ட கல்வி அலுவலர் இதைப் பற்றி சீதாக்கூறுகையில், மாணவ மாணவிகளுக்கு சீருடை ஒரு செட் கொடுத்து விட்டோம் மற்றும்  நோட்டுப் புத்தகங்கள் வந்த வரைக்கும் மாணவர்களுக்கு கொடுத்து விட்டோம்.

மேலும் சில நலத்திட்டம் பொருட்கள் வந்தவுடன் குழந்தைகளிடமே பிரயோகிக்கப்படுவோம் என்றார். எனவே விரைவில் தேவையான நோட்டு புத்தகங்கள் மற்றும் உபயோகப் பொருட்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தேவதானப்பட்டியை  சுற்றியுள்ள கிராமங்களில்  கனிம வளங்கள் டிராக்டர் மூலம் இரவு பகல் பாராமல் கொள்ளை!  சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்கப்படுமா??

பெரியகுளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா மற்றும் சில்லறை மது விற்பனையாளர்களை கலை  எடுக்கும் பணி தீவிரம் !!

Leave a Comment