பெரியகுளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா மற்றும் சில்லறை மது விற்பனையாளர்களை கலை  எடுக்கும் பணி தீவிரம் !!

0
72
Kalai is working hard to take out the ganja and retail liquor sellers in the areas around Periyakulam !!
Kalai is working hard to take out the ganja and retail liquor sellers in the areas around Periyakulam !!

பெரியகுளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா மற்றும் சில்லறை மது விற்பனையாளர்களை கலை  எடுக்கும் பணி தீவிரம் !!

தேனி மாவட்டம் பெரியகுளம் அதன் பகுதிகளில்  சுற்றியுள்ள  கிராமங்களில்  அரசு தடை செய்யப்பட்டுள்ள (கஞ்சா) போதைப் பொருள் மற்றும் அரசு மதுபானங்களை மதுபான கடைகளில் மொத்தமாக பெற்றுக்கொண்டு பெரியகுளத்தை சுற்றியுள்ள அனைத்து  ஊர்களிலும் கள்ளச் சந்தையில் விற்கும் வியாபாரிகள் ஏராளமானோர் விற்று வருகின்றனர்.
இதில் முக்கிய கிராமமான தேவதானப்பட்டி சில்வார்பட்டி ஜெயமங்கலம் ஆகிய கிராமங்களில்  கள்ளச் சந்தையில் அதிக அளவில் மது விற்பனை தாராளமாக நடைபெற்று வருகிறது .இதன் முக்கியமாக மாலை நேரங்களில் ஷேர் ஆட்டோக்களில் மொத்தமாக  வாங்கிக்கொண்டு ஒரு குவாட்டருக்கு  200 முதல் 250  வரை ஷேர் ஆட்டோக்களில் வைத்து ஆட்டோ உரிமையாளர்கள்  விற்பனை செய்து வருகின்றனர் .இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும்  சமூக ஆர்வலர்களுக்கு  வேதனை அளிப்பதாக  கூறுகின்றனர். இதன் அடிப்படையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் உமேஷ் அவர்கள் உத்தரவின் பேரில் தேனி பெரியகுளம் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் க. முத்துக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து இரவு பகல் பார்க்காமல் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கஞ்சா மற்றும் கள்ளச் சந்தையில் விற்கும் மது வியாபாரிகளை கண்காணித்து குற்ற செயலில் ஈடுபடுபவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என காவல் துறையினருக்கு பெரியகுளம் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார்  உத்தரவிடுத்துள்ளார்.  இதன் பெயரில் தேவதானபட்டி காவல் நிலையத்திற்கு புதியதாக பதவியேற்ற காவல் ஆய்வாளர் சங்கர் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். பெரியகுளம் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் தேவதானப்பட்டி அதன் சுற்றுப்பகுதியில்  இதைத்தொடர்ந்து கஞ்சா மற்றும் சட்ட விரோதமாக மது விற்பவர்களை தேவதானபட்டி காவல் ஆய்வாளர் சங்கரன் தேடி வருகிறார்.
இதனால் தேவதானப்பட்டி பொதுமக்கள் தனது பாராட்டை தெரிவித்தனர்.பல நாட்கள் போராட்டம் செய்து  மனு அளித்து எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்பொழுது அந்தப் போராட்டத்திற்கு தீர்வு கிடைத்துவிட்டது என தேவதானபட்டி  பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தனது வாழ்த்துக்களை  பெரியகுளம் காவல் கண்காணிப்பாளருக்கும் தேவதானப்பட்டி காவல் ஆய்வாளருக்கும் பாராட்டை தெரிவித்தனர்.