போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பிச்சென்ற முகமூடி கொள்ளையர்கள்!! பல இடங்களில் கைவரிசை கட்டிய மர்ம கும்பல்..?
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கள்ளுகடை காவாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ் இவருடைய வயது 48 இவரது மனைவி விஜயலட்சுமி இவர்கள் இருவரும் தன் குடும்பத்துடன் எடப்பாடி பூலாம்பட்டி பிரதான சாலை அருகிலுள்ள வீட்டில் குடியிருந்து வருகின்றனர்.
ஜெய்கணேஷ் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனது அலுவலகம் வாயிலாக மாணவர்களை வெளிநாட்டுகளுக்கு கல்வி அனுப்பும் பணி செய்து வருகிறார். இந்நிலையில் தன் வேலைகளை முடித்த அவர் வீட்டிற்கு வந்து உணவு அருந்திவிட்டு தூங்குவதற்காக மாடிக்குச் சென்றுள்ளார்.
பின்னர் அவரது மனைவியும் குழந்தைகளும் உணவு அருந்திவிட்டு வீட்டின் உட்புறத்தில் உறங்கிவுள்ளர்கள்.நடு சாமம் ஆகிய நிலையில் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று அப்போது உள் நுழைந்தது. உள்ளே நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் முதலில் சாமி புகைப்படத்திற்கு பின்புறத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்தை கொள்ளை அடித்தார்கள்.
மீண்டும் அங்குள்ள பெட்டியை திறந்து நகைகளை கொள்ளையடித்தார்கள். கடைசியில் வீட்டில் இருந்த பீரோவை திறக்கும் போது சத்தம் கேட்டு விஜயலட்சுமி விழித்தெழுந்தார்.உள்ளே கொள்ளையடித்திருந்த முகமூடி கொள்ளையர்களை பார்த்து விஜயலட்சுமி சத்தம் போட்டு கூச்சலிட்டார்.
அப்போது அவரது கணவர் ஜெய்கணேஷ் சத்தம் கேட்டு கீழே வந்தார். இதை அறிந்த கொள்ளைக்காரர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். விடாமல் ஜெய்கணேஷ் கொள்ளை கும்பலை துரத்தியுள்ளார். அப்போது விவசாய நில பருத்தி தோட்டத்தில் கும்பல் ஒண்டியது. பருத்தி நிலங்களில் சத்தம் கேட்டு எழுந்து வந்த விவசாயி,அவர்களைப் பார்த்து துரத்த முயன்றுள்ளார்.
மேலும் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பூலாம்பட்டிகாவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் கொள்ளையடித்த வீட்டில் கைரேகைகளை பதிவு செய்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர்.
இதுபோன்று சமீபத்தில் பாறைக்காடு பகுதியிலுள்ள லாரி டிரைவர் வீட்டிலும் மற்றும் பள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த விவசாய ஒருவர் வீட்டிலும் முகமூடி கொள்ளையர்கள் தன் கைவரிசை காட்டியது தெரிய வந்தது. இச்சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று பொதுமக்கள் காவல்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து கொள்ளை சம்பவம் அதிகரித்து வருவதால் காவல்துறையினர் கூடுதல் பணிவேட்டையில் இறங்கவுள்ளார்கள்.