மீண்டும் காயமா? வெஸ்ட் இண்டீஸ் தொடரின் முதல் போட்டியில் விளையாடுவாரா ஜட்டு?

Photo of author

By Vinoth

மீண்டும் காயமா? வெஸ்ட் இண்டீஸ் தொடரின் முதல் போட்டியில் விளையாடுவாரா ஜட்டு?

இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக ஜடேஜா சி எஸ் கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்ததை அடுத்து அவர் கேப்டன் பொறுப்பை துறந்தார். மீண்டும் தோனி கேப்டன் ஆனார். ஆனாலும் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. தோனி, ஜடேஜாவை சுதந்திரமாக செயல்பட விடாததால் அவருக்கும் தோனிக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததாகவும் சொல்லப்பட்டது. கடைசி சில போட்டிகளை ஜடேஜா விளையாடாதது மேலும் சந்தேகங்களைக் கிளப்பியது.

இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியில் இடம்பெற்ற ஜடேஜா சிறப்பாக விளையாடி டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்தினார். இந்நிலையில் இப்போது வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணிக்கான முதல் போட்டியில் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் காயம் காரணமாக அவர் விளையாடமாட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ஜடேஜாவின் உடல்தகுதி பற்றி பேசிய கேப்டன் தவான் “அவருக்கு சிறிய அளவில் வலி இருந்துகொண்டே உள்ளது. அவரை மருத்துவர்கள் கண்காணிக்கின்றனர். அவர் விளையாடுவாரா மாட்டாரா என்பது போட்டி அன்றுதான் தெரியவரும்” எனக் கூறியுள்ளார். தொடர்ந்து காயங்களால் பல போட்டிகளை தவறவிடுகிறார் ஜடேஜா என்பது குறிப்பிடத்தக்கது.