இந்த நாட்டில் படித்துக்கொண்டிருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு இந்திய கல்லூரியில் இடமில்லை! ஒன்றிய அரசின் அதிரடி உத்தரவு!
உக்ரைன்-ரஷியா இருநாடுகளுக்கிடையேயான போர் சில மாதங்களாக நீடித்து வருகிறது. கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மாகாணத்தை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ரஷிய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றது. மேலும் அந்த மாகாணத்தில் ஸ்லோவியன்ஸ்க், அவ்டிவ்கா, குராஸ்னோரிவ்காவ் மற்றும் குராகோவ் ஆகிய 4 நகரங்கள் அரசு படைகளின் வசம் உள்ளது.
மேலும் ஒரே சமயத்தில் அந்த 4 நகரங்கள் மீதும் ரஷிய படைகள் தாக்குதல் நடத்த ஸ்கெட்ச் போட்டுள்ளார்கள். அந்த நகரங்களில் மீது ரஷிய படைகள் இரவு மற்றும் பகல் பாராமல் தொடர்ச்சியாக பீரங்கி குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசி வருவதாக மாகாண கவர்னர் பாவ்லோ கைரிலென்கோ குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அந்த வகையில் டொனெட்ஸ்க் மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அப்பாவி பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் 21 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. ரஷ்ய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருவதால் டொனெட்ஸ்க் மாகாணத்தில் வசிக்கும் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களை உடனடியாக வெளியேறுமாறு பாவ்லோ கைரிலென்கோ வலியுறுத்துகிறார். உக்ரைனின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ் மீதும் ரஷ்ய படைகள் தாக்குதல்களை விரிவுப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியது.
மேலும் வெளிநாடுகளில் மருத்துவம் படித்து பாதியில் நாடு திரும்பும் மாணவர்களை இந்திய மருத்துவக் கழகம் அல்லது பல்கலைக் கழகத்துக்கு மாற்ற தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் வழங்கவில்லை என்று ஒன்றிய அரசு மக்களவையில் தெரிவித்ததுள்ளது. மேலும் அங்கு போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களை இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கும் மாநிலங்களின் முடிவை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அங்கீகரிக்கவில்லை என்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும் அதற்கு ஒன்றிய சுகாதார அமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார் அதில் கூறியிருப்பது இந்திய மருத்துவக் கழக சட்டம் 1956, தேசிய மருத்துவ ஆணையச் சட்டம், 2019ன் படி, வெளிநாட்டு மருத்துவ கல்லூரிகளில் படித்து பாதியில் நாடு திரும்பும் இந்திய மாணவர்களுக்கு இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இடமளிக்கவோ அல்லது இடமாற்றம் செய்யவோ அனுமதியில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான விதிமுறைகள் அமலில் இல்லை. மேலும் தேசிய மருத்துவ ஆணையம் அதற்கு ஒப்புதல் வழங்கவில்லை என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.