இவர்களுக்கு மட்டும் குரூப் 4 தேர்வு எழுத அனுமதி இல்லை!! நெடு நேரமாக போலீசாருடன் வாக்குவாதம்!!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வழிகாட்டுதலின் படி குரூப் 4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு பத்தாம் வகுப்பு கல்வி தகுதி நிலையில் காலியாக இருக்கக் கூடிய 7,301 குரூப்-4 இடங்களுக்கு இன்று தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில் குரூப் 4 தேர்வு எழுத காலை 8:30 மணிக்கு முன்னதாக தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் என தேர்வு எழுதும் அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால் நெல்லை மாநகரில் உள்ள பல்வேறு மையங்களுக்கு காலை 9 மணிக்கு பலர் தேர்வு எழுத வந்திருந்தனர். அவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி தரவில்லை. இதனால் அங்கு பாதுகாப்பிற்கு நின்று கொண்டிருந்த போலீசாருக்கும் தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கும் அதிக வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாளை தனியார் கல்லூரியில் நடைபெற்ற குரூப் 4 தேர்வை ஆய்வு செய்வதற்காக நெல்லை கலெக்டர் சந்திரசேகர் வந்திருந்தார். அப்போது 8:30 மணியை கடந்து வந்த தேர்வர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள்.அப்போது சப் கலெக்டர் சந்திரசேகரை பார்த்ததும் அவரிடம் தங்களை தேர்வு எழுத அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாமல் விதிமுறைகளை பின்பற்றி காலம் கடந்து வந்த தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என்று கூறினார். பின்னர் அவர்களிடம் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். தேர்வு எழுத வந்த அனைவர்களும் மனவேதனையுடன் வீட்டிற்கு திரும்பிச் சென்றனர்.
பாலை ராஜகோபால நகர சேர்ந்த டாக்டர் சிவராஜா மனைவி ஜெனிபர் என்பவர் பாளை தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் தேர்வு எழுத தனது பத்து மாத கைக்குழந்தையுடன் வந்திருந்தார். பின்னர் தனது கணவரிடம் குழந்தையை கொடுத்துவிட்டு தேர்வு அறைக்குச் சென்றார்.
அப்போது தனது குழந்தைக்கு உணவு ஊட்டி அக்கறையுடன் சிவராஜா கவனித்துக் கொண்டார். இதனை அங்குள்ள பொதுமக்கள் அனைவரும் வியப்புடன் பார்த்து ரசித்தனர். இது ஒரு பக்கம் இருக்கும் நிலையில் மற்றொரு பக்கம் தேர்வு எழுத வந்த அனைவரும் ஏமாற்றுடன் திரும்பி சென்றது கவலையை அளிக்கிறது.