கடமலை மயிலை ஒன்றியத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்!

கடமலை மயிலை ஒன்றியத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்!

 தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க தேனி மாவட்ட ஆட்சியரின் உத்தரவில் தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள கண்டமனூர், கடமலைக்குண்டு, குமணன்தொழு, கோம்பை தொழு, பொன்னம் படுகை, மயிலாடும்பாறை, வருசநாடு, சிங்கராஜபுரம், தும்மக்குண்டு உட்பட 18 ஊராட்சிகளிலும் இம் முகாம் நடைபெற்றது.
இதில் முதல் தவணை செலுத்தியவர்கள் இரண்டாவது தவணை செலுத்தவும் இரண்டாவது தவணை செலுத்தி 6 மாத கால கெடுவுக்குள் முடிந்தவர்கள் மூன்றாவது தவணை செலுத்தி கொள்ளவும் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது. இதில் அந்தந்த பகுதியில் உள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் மற்றும் கிராம செவிலியர்கள் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான பொது மக்கள் முக கவசம் அணிந்து ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்துகின்றனர்.

Leave a Comment