சிமெண்ட் சாலை அமைக்கும் பணியில் மோசடி! கண்டுகொள்ளாத அதிகாரிகள்!
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே பழங்குடியினர் காலனி பகுதியில் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சிமெண்டு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அருகில் உள்ள ஓடையில் மணல் திருடி தரமற்ற முறையில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை ஒன்றிய அதிகாரிகள் யாரும் ஆய்வு மேற்கொள்வதில்லை. மணல் திருட்டு தொடர்பாக வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை அதிகாரிகள் முறையாக ஆய்வு மேற்கொள்வதில்லை. தரமற்ற முறையில் பணிகள் நடைபெற்று வருவதால் சிமெண்டு சாலை சில மாதங்களிலேயே முற்றிலுமாக சேதமடைந்து விடும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சிமெண்டு சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும் மண் திருட்டு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர் தெரிவித்தனர்.