சாலையில் சென்ற முதியவர் மீது பைக் மோதி விபத்து!.. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!…
நெல்வாய் கிராமத்தில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் இரு சக்கர வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். உயிர் இழந்த முதியோரின் வயது 85 இவர் சித்தாமூர் அருகே நெல்வாய்க் கிராமத்தைச் சேர்ந்தவர்.
இவரும் இவருடைய மனைவி ஆதிலக்கியம் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 21ஆம் தேதி பொலம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுவிட்டு சாலையோரம் நடந்து சென்றிருந்தார்கள்.நெல்வாய் கிராமம் அருகே சென்றபோது மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த ஆதிகேசவன் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் மதுராந்தகத்தில் இருந்து சித்தாமூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது சாலையோரம் ராகவன் மற்றும் ஆதிலட்சுமி சென்று கொண்டிருந்தார்கள். திடீரென்று சாலையோரம் சென்று கொண்டிருந்த முதியோர்களின் மீது இருசக்கர வாகனம் மோதியது. அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டுஅருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் பலத்த காயம் ஏற்பட்ட ராகவன் இரண்டு நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இந்த விபத்துக்கு குறித்த சித்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆதி கேசவனின் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.