தேனியில் அதிமுக வினர் மின் கட்டண உயர்வு சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை  கண்டித்து ஆர்ப்பாட்டம்! 

0
157
In Theni, AIADMK members protested against the increase in electricity tariff and the law and order disorder!
In Theni, AIADMK members protested against the increase in electricity tariff and the law and order disorder!

தேனியில் அதிமுக வினர் மின் கட்டண உயர்வு சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை  கண்டித்து ஆர்ப்பாட்டம்!

தேனி மாவட்டத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் மின் கட்டண உயர்வு சட்டம் ஒழுங்கு சீர்கேடுஆகியவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் வருவாய் துறை அமைச்சர் ஆர் .பி. உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.அப்போது தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவருடைய சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்திலிருந்து நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் அணிவகுத்து வந்திருப்பது பன்னீர் செல்வத்தினுடைய செல்வாக்கு இல்லாமையை காட்டுகிறதுன்றும் ,மேலும் தர்ம யுத்தம் நடத்திய பன்னீர்செல்வம் தற்போது துரோகி யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

அண்ணா திமுகவினுடைய கட்சி ஒற்றுமையை உடைத்து மூன்று பாகமாக உருவாவதற்கு முழு காரணமே ஓ.பன்னீர்செல்வம் தான் என்று குற்றம் சாட்டினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தினுடைய முதல்வர் ஸ்டாலினை குறை கூறுவதை குறைத்துக் கொண்டு அதிகமான நேரங்களில் முன்னாள் முதல்வரும் அதிமுகவின் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வத்தையும் அவருடைய ஆதவர்களையும் குறை கூறிக் கொண்டே அதிக நேரம் பேசியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியகுளம் . ஆண்டிபட்டி .போடி. கம்பம் .உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களை பணம் கொடுத்து அழைத்து வந்துள்ளார் என பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. காலை 10 மணிக்கு தொடங்க வேண்டிய நிலையில் பல்வேறு ஊர்களில் இருந்து மற்றும் பேருந்துகளில் அழைத்து வரப்பட்ட பெண்களும் – வயதானவர்களும் கூட்டம் தொடங்குவதற்க்கு முன்பே திரும்பி சென்றுவிட்டார்கள்-தாமதமாகவே ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

Previous articleதிருப்பத்தூர் மாவட்டத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் !!தண்ணீருடன் விஷம் கொண்ட உயிரினம் இருப்பதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி ?..
Next article”ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்த மாற்றத்தை செய்ய வேண்டும்”… ரவி சாஸ்திரியின் கருத்து சரியா?