Breaking News, Crime, District News

பிளஸ் 1 மாணவன் கொலை.. கொலையாளிக்கு  சித்தப்பா கூட்டு?..வெளிவரும் அதிர்ச்சி தகவல்!..

Photo of author

By Parthipan K

பிளஸ் 1 மாணவன் கொலை.. கொலையாளிக்கு  சித்தப்பா கூட்டு?..வெளிவரும் அதிர்ச்சி தகவல்!..

Parthipan K

Button

பிளஸ் 1 மாணவன் கொலை.. கொலையாளிக்கு  சித்தப்பா கூட்டு?..வெளிவரும் அதிர்ச்சி தகவல்!..

திருக்கோவிலூர் அருகேயுள்ள டிகீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் தான் சக்கரவர்த்தி.இவருடைய மகன் கோகுல்.இவரின் வயது பதினேழு.இவர் அங்குள்ள அதே பகுதியிலுள்ள  தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோகுல் தன்னை கிண்டல் செய்ததாக கூறி அதே பள்ளியில் படித்து வரும் 17 வயதுடைய மாணவர் ஒருவன் கோகுலை அரிவாளால் சரமாரியாக வெட்டிவுள்ளார்.

இரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார்.இதையடுத்து அந்த கொலை செய்த மாணவரை போலீசார் கைது செய்தனர்.பதினேழு வயதே ஆன இந்த மாணவனை கடலூர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். அதன்படி இந்த கொலை வழக்கு சம்பந்தமாக அந்த மாணவரை அவரது சித்தப்பா கனகனந்தல் கிராமத்தை சேர்ந்த இளம்வழுதி.

இவருடைய வயது 38.இந்த கொலை குறித்து போலீஸுக்கு தெரிவிக்காமல் இருக்க அவனை மோட்டார் சைக்கிளில் வைத்து அங்கும் இங்குமாக சுற்றிக்கொண்டு இருந்துள்ளார்.மேலும் கொலைக்கு இவர் உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து இளம்வழுதியையும் கைது செய்த போலீசார் அவரிடமிருந்த மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.மேலும் இந்த கொலையில் ஈடுபட்ட அனைத்து நபரையும் விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் விவசாயி தற்கொலை! காரணம் என்ன?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் அரங்கேறிய சம்பவம்! பார்வையற்ற பெண்ணின் மீது தாக்குதல்!

Leave a Comment