நெல்லை மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் கடிதம்! நெஞ்சை உருக்கும் பதிவு!

0
180
A letter from the mother-in-law who committed suicide in Nellai district! A heart-melting post!
A letter from the mother-in-law who committed suicide in Nellai district! A heart-melting post!

நெல்லை மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் கடிதம்! நெஞ்சை உருக்கும் பதிவு!

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம் ராஜலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (53). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் பாப்பா (18). இவர் பொண்ண குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் பிடிக்கும் கல்லூரியில் கட்டணம் ரூ.2000 முத்துக்குமார் இரண்டு தவணைகளாக  செலுத்தியுள்ளார். மேலும் முத்துக்குமார் கூலி தொழில் செய்வதால் குடும்ப செலவுக்கு போதிய வருமானம் வருவதில்லை.

இந்நிலையிலும் அவரது மகள் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற காரணத்தால் சிரமப்பட்டு பணத்தை ஏற்பாடு செய்து அவரை கல்லூரியில் படிக்க வைத்துக் கொண்டிருந்தார். மேலும் பாப்பா தனது பெற்றோர் நமது படிப்பிற்காக சிரமப்படுவதை கண்டு மனவேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துக்குமார் தனது மனைவியுடன் களக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மாணவி பாப்பா அவரது துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் முத்துக்குமாரும் அவரது மனைவியும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு மூடப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது மாணவி பாப்பா தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் இருந்தார்.

மேலும் அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அக்கம் பக்கத்தினரை உதவிக்காக அழைத்தனர். மேலும் சம்பவம் குறித்து களக்காடு போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பெயர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர் தற்கொலை செய்வதற்கு முன் எழுதிய கடிதம் சிக்கியது.

மேலும் அந்த கடிதத்தில் தனது படிப்பு செலவுக்காக பெற்றோர்கள் சிரமப்படுவதை பார்க்க முடியாமல் தான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன் மேலும் எனது அப்பா, அம்மா விற்கும் மற்றும் என்னுடைய குடும்பத்தினருக்கும் என்னால் ஏந்தவித கஷ்டமும் ஏற்பட கூடாது என பாப்பா எழுதி அவரது டையிரியில் எழுதி வைத்திருந்தார்.அதனை போலீசார் கைப்பற்றி அனைவரிடமும் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Previous articleமழையால் சதத்தை தவறவிட்ட சுப்மன் கில்… வொயிட் வாஷ் செய்த இந்தியா!
Next articleசென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க ஈபிஎஸ் & ஒபிஎஸ் திட்டம்?