Home Breaking News சேலம் மாவட்டத்தில் பெரியார் பல்கலைகழகம் முன்பு ஆசிரியர்கள் போராட்டம்! காரணம் என்ன  போலீசார்ருடன் வாக்குவாதம்!  

சேலம் மாவட்டத்தில் பெரியார் பல்கலைகழகம் முன்பு ஆசிரியர்கள் போராட்டம்! காரணம் என்ன  போலீசார்ருடன் வாக்குவாதம்!  

0
சேலம் மாவட்டத்தில் பெரியார் பல்கலைகழகம் முன்பு ஆசிரியர்கள் போராட்டம்! காரணம் என்ன  போலீசார்ருடன் வாக்குவாதம்!  
Teachers strike in front of Periyar University in Salem district! What is the reason for the argument with the police!

சேலம் மாவட்டத்தில் பெரியார் பல்கலைகழகம் முன்பு ஆசிரியர்கள் போராட்டம்! காரணம் என்ன  போலீசார்ருடன் வாக்குவாதம்!

 சேலம் மாவட்டத்தில் சேலம் மண்டல சங்க தலைவர் பிரகாஷ் தலைமையில்  மாநில பொதுசெயலாளர் கிருஷ்ணராஜ், மண்டல செயலாளர் லோகநாதன், இந்திய வாலிபர் சங்க மாநில தலைவர் ஏ. டி. கண்ணன், மாநில துணைத்தலைவர் தேன்மொழி, மாவட்டத் தலைவர் பவித்ரன் ஆகியோர் முன்னிலை நேற்று மாலை 4 மணி அளவில்சேலம் மாவட்டத்தில்  பெரியார் பல்கலைக்கழகம் முன்பு   தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பெரியார் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு குழு மற்றும் இந்திய வாலிபர் சங்கம் ஆகியவை இணைந்து 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரியை  முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தினர்.

மேலும்  அந்த போராட்டத்தில் போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது அந்த  ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும்.என்றும்  ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் உள்ளடக்கிய ஆராய்ச்சி பாட திட்ட குழு கூட்டத்தினை உடனே நடத்த வேண்டும் என்றும் ஆட்சி மன்ற குழு கூட்டத்தினை உடனே நடத்த வேண்டும் என்றும்  பெரியார் பல்கலைக்கழகத்தின் நிரந்தர பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும் போன்ற  உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடினார்கள்.

மேலும் இதனைத்தொடர்ந்து துணைவேந்தர் ஜெகநாதனை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க அலுவலகம் உள்ளே செல்ல முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது ஆசிரியர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

author avatar
Parthipan K