தேனி மாவட்டத்தில் ஆடி அமாவாசையையொட்டி பல்வேறு சிவ தளங்களில் சிறப்பு வழிபாடுகள்! பொதுமக்களின் சுகாதார நலத்தை பேணிக்காக்கும் படி மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை!

0
68
Special worship at various Shiva sites on the occasion of Adi Amavasi in Theni district! Request to the district administration to maintain public health!
Special worship at various Shiva sites on the occasion of Adi Amavasi in Theni district! Request to the district administration to maintain public health!

தேனி மாவட்டத்தில் ஆடி அமாவாசையையொட்டி பல்வேறு சிவ தளங்களில் சிறப்பு வழிபாடுகள்! பொதுமக்களின் சுகாதார நலத்தை பேணிக்காக்கும் படி மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை!

தேனி மாவட்டத்தில் ஆடி அமாவாசையையொட்டி பல்வேறு சிவ தளங்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் மகாதீபணையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு. பெரிய தேனி மாவட்டம் பல்வேறு பகுதிகளில் சிவாலயங்கள் மற்றும் அம்பாள் கோவில்களில் ஆடி அமாவாசையை ஒட்டி ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி முருக பெருமானுக்கு மற்றும் ஈசன் _ அம்பாளுக்கு பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான அலங்கார மலர்கள் அலங்காரம் செய்து மகாதீபாரணை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து பாலசுப்பிரமணி சாமி படித்துறையில் பல  பக்தர்கள் ஒன்று கூடி தனது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். தனது முன்னோர்களை நினைத்து எள் மற்றும் அபிஷேகப் பொருட்களால் அவர்களுக்கு படைத்து அவர்களை நினைத்து வழிபட்டனர். முன்னதாக இந்த படித்துறையில் ஆண் மருத மரமும் பெண் மருத மரமும் இரண்டும் இணைந்து உள்ள இடத்திற்க்கு நடுவே வராக நதி ஓடுவதால் காசிக்கு அடுத்தபடியாக இந்த நதி சிறப்பு பெயர் பெற்றது.

ஏராளமான பெண்கள் இந்த புனித ஆற்றில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட குளித்துவிட்டு தங்களது முன்னோர்களை நினைத்து வழிபட்டனர். இதே போல் பாலசுப்ரமணிய கோவில் வளாகத்தில் உள்ள அழகு நாச்சியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரணைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து கோவில் மற்றும் நகர் பிரமுகர் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது. மற்றும் மகா தீபாரணைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து இங்கு கலந்து கொண்ட பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதே போல் தேவதானப்பட்டி மூங்கில்னண காமாட்சி அம்மன் கோவிலில்அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரணைகள் நடைபெற்றன. வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு சென்றனர். இங்கு உள்ள ஆற்றில் முன்னோர்களை நினைத்து பக்தர்கள் புரோகி தை வைத்து தர்ப்பணம் செய்தனர். இதே போல் தேனிவீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாணைகள் நடைபெற்றன.

இதனை தொடர்ந்து வீரபாண்டி ஆற்றில் படித்துறையில் பக்தர்கள் ஒன்று கூடி ஆற்றில் குளித்து விட்டு தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தனர். வீரபாண்டி பேரூராட்சி நிர்வாகம் சரிவர சுகாதாரத்தை பின்பற்றாத காரணத்தினால் அந்த பகுதியில் ஏராளமான சுகாதார கேடுகள் ஏற்பட்டு வந்ததாக அப் பகுதி மக்கள் அரசுக்கு புகார் தெரிவித்துள்ளனர். சுந்தர மகாலிங்கம் சுவாமி திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாணைகள் நடைபெற்றன.

ஆடி அமாவாசை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் செல்வதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதை தொடர்ந்து நேற்று இரவு முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி மலையில் ஏறி சிவனை வழிபட்டு சென்றனர். அங்கும் முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிப்பட்டனர். கம்பம் சுருளி அருவியில் ஸ்ரீ சுருளி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரணைகள் நடைபெற்றன.

பல்வேறு ஊர்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித கங்கை தீர்த்தங்களை வைத்து ஸ்ரீ சுருளி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகாதீபாரணை காண்பிக்கப்பட்டது. சுருளி அருளிவியில்தண்ணீர் அதிகமாக ஓடுவதால் ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களை நினைத்து குளித்து விட்டு தர்ப்பணம் செய்து வழிபட்டு சென்றனர்.

தேனி மாவட்டத்தை பொருத்தவரை பல்வேறு கோவில்கள் ஆலயங்கள் இருந்தும் இந்து அறநிலை துறை நிர்வாகம் போதிய ஏற்பாடு செய்யபடாத நிலையில் ,இதற்கு காரணம் என்று இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர், ஆகவே இனி வரும் காலங்களில் கோவில் அறநிலைத்துறை நிர்வாகம் சார்பில் கோவில் வருமானத்தை மட்டும் கணக்கிட்டு செயல்படாமல் பொதுமக்களின் சுகாதார நலத்தையும் கருதி சுற்றுப்புற சுகாதாரமாக வைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.