கொத்து கொத்தாக செத்து மடியும் அப்பாவி உயிர்கள் !!துர்நாற்றத்தால் சூழ்ந்த அப்பகுதி !!காரணம் என்ன ?

0
248
Innocent lives are dying in bunches !!The area is surrounded by stench !!What is the reason ?
Innocent lives are dying in bunches !!The area is surrounded by stench !!What is the reason ?

கொத்து கொத்தாக செத்து மடியும் அப்பாவி உயிர்கள் !!துர்நாற்றத்தால் சூழ்ந்த அப்பகுதி !!காரணம் என்ன ?

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் செய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர் வடித்து அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 16 இல் மேட்டூர் அணை நிரம்பியது. அதன்படி  அணைக்கு வரும் நீர் முழுவதும் 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வருகின்றது.

நீர்வரத்து குறைந்ததால் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வந்த உபரிநீர்  நிறுத்தப்பட்டது. இதனால் தங்கமாபுரிபட்டினம்,சின்னகாவூர்,சேலம் கேம்ப் பகுதிகளில் ஆங்காங்கே குளங்கள் போல் தங்கி தேங்கி நிற்கிறது. இந்த தேங்கிய நீரில் கட்லா, ரோகு, கெளுத்தி ,கெண்டை ,ஜிலேபி போன்ற பல வகையான டன் கணக்கில் மீன்கள் வாழ்கின்றது.

இதனை சாதகமாக பயன்படுத்தி சமூக விரோதிகள் சிலர் தேங்கிய நீரில் பாறைகளை உடைக்க உபயோகிக்கும் தோட்டாவை வீசி மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து தோட்டாவை வீசி மீன் பிடிக்கும் கும்பல் பெரிய அளவிலான மீன்களை மட்டும் எடுத்துக் கொண்டு சிறிய அளவிலான மீன்களை அப்படியே தண்ணீரில் விட்டு விட்டு செல்கின்றனர்.

இதனால் கரையில் இரு புறங்களிலும் மீன்கள் அழுகிய நிலையில் காணப்படுகின்றன. மேலும் அழுகிய மீன்கள் அனைத்தும் துர்நாற்றம் வீசி வருவதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

தோட்டாவை விநியோகம் செய்யும் நபர்கள் மீதும் தோட்டாவை வீசி சென்ற மீன் பிடிக்கும் தொழிலாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு சூழல் நிலவி வருகிறது.

Previous articleஈரோடு மாவட்டத்தில் இரண்டு வயது  சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள் போலீசார் விசாரணை!
Next articleஇயக்குனர் & நடிகர் ஜி எம் குமார் மருத்துவமனையில் அனுமதி!