இடத்தகராறில் செங்களால் தாக்கிவிட்டு தலைமறைவான மூன்று பேர்!.போலீசார் வலைவீச்சு !..
மூலைக்கரைப்பட்டி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி இவரது வயது 75. இவருக்கு இரு மகன்கள் உள்ளார்கள். இவரின் மூத்த பிள்ளையான ராஜேந்திரன் வயது 45. இரண்டாவது பிள்ளை ராமச்சந்திரன் வயது 40. பாண்டியின் இரண்டு மகன்களுக்கும் தனித்தனி வீடு கட்டிகொடுக்கப்பட்டது.
மேலும் கட்டப்பட்டிருந்த வீடுகளுக்கு செல்லும் பொது பாதையில் பல மாதமாக பிரச்சனை வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாண்டியன் ராஜேந்திரனின் மனைவி சுந்தரியை அவதூறாக பேசினார்.இதை தட்டி கேட்ட ராஜேந்திரன் மற்றும் சுந்தரியை பாண்டி, ராமச்சந்திரன் மனைவி இந்திரா அவரது தம்பி தினேஷ் குமார் ஆகியோர் சேர்ந்து செங்கல்லால் அவரை கடுமையாக தாக்கியதில் இருவரும் பலத்த காயமடைந்தார்கள்.
இதனால் இருவரும் மயங்கி நிலையில் கீழே விழுந்தனர். இதைக் கண்ட அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்கள்.பின்னர் அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆழ்வார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.