மாணவர்களின் கவனத்திற்கு!இந்த படிப்புகள் சேர இன்றே கடைசி நாள்!

0
134
Attention students! Today is the last day to join these courses!
Attention students! Today is the last day to join these courses!

மாணவர்களின் கவனத்திற்கு!இந்த படிப்புகள் சேர இன்றே கடைசி நாள்!

தமிழகத்தில் பி.இ, பி.டெக், பி ஆர்க் படிப்புகளில் சேர விண்ணப்படிவம் கடந்த ஜூலை 20ஆம் தேதி தொடங்கியது மேலும் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாவதில் சிறிய கால  தாமதம் ஏற்பட்ட காரணத்தால் பொறியியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப் படிவம் நிரப்புவதற்கு காலஅவகாசம் கொடுக்கப்பட்டது. மேலும் சிபிஎஸ்சி தேர்வு முடிவு கடந்த 22ஆம் தேதி வெளியான நிலையில் கூடுதலாக 5 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

மேலும் பொறியியல் படிப்புகளில் உள்ள 2 லட்சத்து 32 ஆயிரத்து 872 இடங்கள் உள்ளது. இதுவரை 2,11,905  பேர் விண்ணப்பத்தில்  தமிழகத்தில்  உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இதுவரை 4 லட்சத்து 745 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

மேலும் பி.இ கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான விண்ணப்ப பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த புதன்கிழமை நிறைவடைந்தது. பி.இ படிப்புக்கு மட்டும் இன்று மாலை வரை சான்றிதழ் பதிவேற்றம் மற்றும் பணம் செலுத்தலாம் எனவும்  நாட்டா தேர்வு முடிவுகள் வெளியாகும்  வரை பி ஆர்க் படிப்புக்கு  விண்ணப்பிக்கலாம்எனவும்  கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில்நடப்பாண்டில்  பிஇ படிப்புகளில் சேர 2 லட்சம் பேர் வினைப்புத்துள்ள நிலையில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இன்றே கடைசி நாளாகும் என்றும் கல்வித்துறை அறிவித்துள்ளது.

Previous article‘பொன்னி நதி’… பொன்னியின் செல்வன் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் அப்டேட்!
Next articleஇரு படைகளுக்கு ஏற்பட்ட போராட்டத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!.