இணையதளத்தில் உயர்கல்வி படிப்புகள் இலவசம்!! பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு..

0
171
Online Higher Education Courses Free!! University Grants Commission released a new notification..
Online Higher Education Courses Free!! University Grants Commission released a new notification..

இணையதளத்தில் உயர்கல்வி படிப்புகள் இலவசம்!! பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு..

தற்போது தொடர்ந்து வரும் கல்வி ஆண்டில் பல்கலைக்கழக மானியக்குழு 23 ஆயிரத்துக்கு மேற்பட்ட உயர்கல்வி படிப்புகளை புதிய இணையதளம் ஒன்றில் மூலம் இலவசமாக அளிக்கிறது. இந்த இணையதளமானது தேசிய கல்விக்கொள்கையின் இரண்டாம் ஆண்டு நிறை வடைந்ததையொட்டி இன்று (29l07l2022) வெள்ளிக்கிழமை தொடங்கப்படுகின்றது.

மேலும் இவை செயற்கை நுண்ணறிவு, இணைய பாதுகாப்பு, பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு போன்றவை இந்த படிப்புகளில் உள்ளடங்கும் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கும் உயர்கல்வி சென்றடைவதற்காக இத்திட்டம் தொடங்கப்படுகிறது. இதற்காக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் பல்கலைக்கழக மானியக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்நிலையில் அமைச்சகத்தின் கீழ் உள்ள 7 லட்சத்து 50 ஆயிரம் பொது சேவை மையங்கள் மூலம் இந்த படிப்புகளை மாணவர்கள் எந்த கட்டணமும் இல்லாமல் இலவசமாக பெறலாம்.

ஆனால் பொது சேவை மையங்களின் கட்டமைப்பை பயன்படுத்துவதால், அந்த மையங்களுக்கு மாதம் ரூ.500 செலுத்த வேண்டி இருக்கும் என்று பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.இதனால் பெரும்பலோர் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபரமபதத்தில் பாம்பு கொத்தியது போல சறுக்கிய கோஹ்லி… இதுவரை இல்லாத மோசமான தரவரிசை
Next articleஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி இவர்களுடன் ஆலோசனையா? அவ்விடத்தில் குவிந்த கட்சித் தொண்டர்கள்!