ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி இவர்களுடன் ஆலோசனையா? அவ்விடத்தில் குவிந்த கட்சித் தொண்டர்கள்!

0
61
Is Prime Minister Modi consulting with them in the Governor's House? Party workers gathered there!
Is Prime Minister Modi consulting with them in the Governor's House? Party workers gathered there!

ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி இவர்களுடன் ஆலோசனையா? அவ்விடத்தில் குவிந்த கட்சித் தொண்டர்கள்!

நேற்று மாலை 5 மணி அளவில் பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். மேலும் சென்னையில் பிரம்மாண்டமாக 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் அடுத்த பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இன்று முதல் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறவுள்ளது.

மேலும் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று  சிறப்பாக நடைபெற்றது. பிரதமர் மோடி விழாவில் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நாட்டின் 75 நகரங்கள் சுற்றி வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஏற்றப்பட்டது.  மேலும் வெள்ளை மற்றும் கறுப்பு நிற காய் எடுத்து வரப்பட்டது. அப்போது கறுப்பு நிற காயைப் பிரதமர் மோடி தேர்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு கறுப்பு நிற காய் தேர்வு செய்யப்பட்டது.

மேலும் ஒலிம்பிய விழாவை தொடங்கி வைத்த மோடி அவர்கள் முதலில் அனைத்து மொழிகளிலும் வணக்கம் என்று கூறி அவரது உரையாடலை தொடங்கினார். மேலும் இந்த விழாவை தொடர்ந்து பிரதமர் மோடி நேற்று இரவு ஆளுநர் மாளிகையில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடியை சந்திக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மத்திய இணை அமைச்சர், எல் முருகன் சட்டமன்ற உறுப்பினர் நாயனார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி அவர்கள் மு க ஸ்டாலினை பற்றி புகழ்ந்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K