சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அட்டகாசம் செய்த முகமூடி திருடர்கள்! வெளியான சிசிடிவி பதிவு அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

Photo of author

By Parthipan K

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அட்டகாசம் செய்த முகமூடி திருடர்கள்! வெளியான சிசிடிவி பதிவு அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காவான்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ். இவரது  வீட்டிற்குள் நுழைந்த மர்ம நம்பர்கள் வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த ஒரு லட்சத்து 25 ஆயிரத்தை  திருடி சென்றனர். மேலும் இது  போன்று எடப்பாடி பகுதியில் பல்வேறு இடங்களில் முகமூடி அணிந்து கைவரசி காட்டி வந்தன இதனால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மேலும் இவ்வாறு திருட்டு நடப்பதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். மேலும் தனி படை அமைத்து ரகசிய கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டனர் அப்போது எடப்பாடி பகுதியில் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் போது கேமராக்களில் பதிவான அதில் முகமூடி அந்த படி இரண்டு பேர் நடமாடியது தெரியவந்தது.

மேலும் அந்த காட்சியை கொள்ளையர்கள் இரண்டு பேரும் டவுசர் அணிந்துள்ளனர். சட்டை எதுவும் அணியவில்லை இதனை பதிவு செய்த போலீசார் இந்த ரெண்டு பேர் யார் என்பது குறித்து அடையாளம் காண முயற்சி மேற்கொண்டனர். மேலும் கொள்ளையர்கள் உருவத்தைக் கொண்டு போலீசார் அவர்களை கைது செய்ய தேடுதலில் ஈடுபட்டன இந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது