கொரோனா பாதிப்பால் வெளியேறிய கே எல் ராகுலுக்கு பதில் இவரா? வெளியான அறிவிப்பு!

0
202

கொரோனா பாதிப்பால் வெளியேறிய கே எல் ராகுலுக்கு பதில் இவரா? வெளியான அறிவிப்பு!

இன்று தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி 20 தொடரில் கே எல் ராகுல் கொரோனா தொற்று காரணமாக விலகியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக சீராக ரன்களை சேர்த்து இந்திய அணியில் தனககான இடத்தை தக்கவைத்துள்ளார் கே எல் ராகுல். இந்திய அணிக்கு துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இப்போது காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறிய அவர் ஜெர்மனியில் சிகிச்சை பெற்று திரும்பினார்.

இதற்கிடையில் சிகிச்சையில் குணமான அவர் அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இப்போது அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் இப்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி 20 தொடரில் இருந்து விலகியுள்ளார். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

அவருக்கு பதில் மாற்று வீரர் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார். சமீபத்தைய தொடர்களில் சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே அணியில் ரிஷப் பண்ட் இருப்பதால் சஞ்சு சாம்சன் ஆடும் லெவனில் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Previous articleமேட்டூர் அருகே கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம்!..நடந்த சம்பவம் என்ன?
Next articleதூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு பெண்ணிற்காக இரண்டு வாலிபர்கள் தகராறு! அரிவாள் வெட்டால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here