8 மாதங்களுக்குப் பிறகு அணியில்…. இன்றைய போட்டியில் அஸ்வினுக்கு இடம் கிடைக்குமா?

0
285

8 மாதங்களுக்குப் பிறகு அணியில்…. இன்றைய போட்டியில் அஸ்வினுக்கு இடம் கிடைக்குமா?

இன்று தொடங்க உள்ள டி 20 கிரிக்கெட் தொடரில் ஆடும் லெவன் வீரர்களை தேர்வு செய்வது மிகப்பெரும் சவாலாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இன்று இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி தொடங்க உள்ளது. இதில் இந்தியாவுக்காக விளையாடப்போகும் ஆடும் லெவன் அணி பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. ஏனென்றால் அணியில் ஒவ்வொரு இடடத்துக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட திறமையான வீரர்கள் இருப்பதால் யாரை தேர்வு செய்வார்கள் என்ற குழப்பம் எழுந்துள்ளது.

இந்நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள சுழல்பந்து வீச்சாளர் அஸ்வினுகு ஆடும் லெவனில் இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் ஏற்கனவே சஹால் மற்றும் ஜடேஜா ஆகியோர் உள்ளனர். அஸ்வின் கடைசியாக உலகக்கோப்பை டி 20 தொடரில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியில் நட்சத்திர பவுலராக வலம் வந்துகொண்டிருந்தவர் ரவிச்சந்திரன் அஸ்வின். உலகக்கோப்பையை வென்ற 2011 ஆம் ஆண்டு இந்திய அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு லிமிடெட் ஒவர் கிரிக்கெட் போட்டிகளில் வாய்ப்பளிக்க படவில்லை. அதனால் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தி அதில் முன்னணி பவுலராக இருந்து வருகிறார். கடைசியாக அவர் 2021 ஆம் ஆண்டு டி 20 உலகக்கோப்பை தொடரில் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleநெல்லை அருகே சரமாரியாக வெட்டிய இரண்டு வாலிபரை கைது செய்த போலீஸ்!! பகீர் திருப்பம்?
Next articleஈரோடு மாவட்டத்தில் துக்கம் விசாரிக்க சென்ற இருவருக்கு நேர்ந்த கொடுமை! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here