தசை பிடிப்பிற்கு முக்கிய காரணம் தண்ணீர் தானா? முழு விவரங்கள் இதோ!

0
208

தசை பிடிப்பிற்கு முக்கிய காரணம் தண்ணீர் தானா? முழு விவரங்கள் இதோ!

தற்போதுள்ள காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு சிறுநிரக பிரச்சனை, தலைவலி, உடல் சோர்வு என்று பலவிதமான உடல் உபாதைகள் ஏற்படுவது வழக்கம். அதேபோல பலருக்கும் தசைப் பிடிப்பும் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். சிலருக்கு இரவு தூங்கும்பொழுது, உடற்பயிற்சி செய்யும்போது, படிக்கட்டில் ஏறும்போது என பல நேரங்களில்  தசை பிடிப்பு ஏற்படும். மேலும் கெண்டை கால், தொடையின் கீழ் பகுதி உள்ளிட்ட இடங்களில் மின்னல் வெட்டுவதுபோல ஒரு வலி ஏற்பட்டு நரம்போடு சதையும் சுறுண்டுகொள்வதுபோல் தோன்றும். பெரும்பாலும் கர்ப்பிணி பெண்கள் இதுபோன்ற வலியால் அதிகம் அவஸ்தைப்படுவது உண்டு.

மேலும் மருத்துவர்கள் அனைவருக்கும் பொதுவாகக்கூறும் ஒரே ஒரு அறிவுறை தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும், என்பதுதான். உடலில் இந்த தண்ணீர் பற்றாக்குறை காரணமாகத்தான் தசை பிடிப்பு ஏற்படுகிறது என்கின்றார்கள் மருத்துவர்கள்.

மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு பொதுவாக ஊட்டச்சத்து பற்றாக்குறை இருக்கும் அதனுடன் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படும்போது அவர்களுக்கு தசை பிடிப்பு அதிகமாக காணப்படுகிறது. மேலும் அதேபோல உடற்பயிற்சி செய்யும் பலரும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள தவறுகிறார்கள், தண்ணீரும் போதுமான அளவு குடிப்பது இல்லை. இதனால் அவர்களுக்கும் தசை பிடிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளன.

இதையெல்லாம் தவிர கோடை காலம் வந்ததும் ஒரு சிலருக்கு தசை பிடிப்பு ஏற்படுகிறது. உடலில் ஏற்கனவே நீர் பற்றாக்குறை உள்ளவர்கள் மட்டும் இன்றி பொதுவாக அனைவருக்குமே இந்த தசை பிடிப்பு ஏற்படும். சாதாரண நாட்களை விட கோடை காலத்தில் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதே இதற்கான வழிமுறை.

 

Previous articleஅசத்தல்…இந்த மாநிலத்தில் மட்டும் பெண்களுக்கு இலவச பேருந்து இயக்கம்?அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!..
Next articleபாசிப்பயிரில் சாலட் செய்யலாமா! முழு விவரங்கள் இதோ!