தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர கூட்டம்! தலைவர் பால்பாண்டி தலைமையில் நடைபெற்றது!

Photo of author

By Rupa

தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர கூட்டம்! தலைவர் பால்பாண்டி தலைமையில் நடைபெற்றது!

Rupa

Monthly meeting at the Thamaraikulam municipality office meeting! It was held under the leadership of President Balpandi!
தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர கூட்டம்! தலைவர் பால்பாண்டி தலைமையில் நடைபெற்றது!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் இன்று மாதாந்திரக் கூட்டம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தாமரைக்குளம் பேரூராட்சிக்குட்பட்ட 15-வார்டு பகுதிகளில் உள்ள பொதுக் கழிப்பறைகளை முறையாக பராமரிப்பு செய்தல், வாட்டர் டேங்க் பராமரிப்பு செய்து  பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருதல், புதிதாக வாட்டர் டேங்க் அமைத்தல், சாலைகள் சேதம் அடைந்துள்ள பகுதிகளில்  புதிதாக சாலை வசதி  அமைத்தல்,   தாமரைக்குளம் பேரூராட்சியை  நகராட்சியுடன்   இணைப்பதை நிராகரிக்க வேண்டும்.
உள்ளிட்ட மொத்தம் 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பேரூராட்சி துணைத்தலைவர் மலர்க்கொடி சேதுராமன்,  பணி நியமன குழு தலைவர் பாலாமணி பழனி முருகன்,வார்டு உறுப்பினர்கள் பாண்டி,கவிதா,கோமதி, முத்துலட்சுமி, ராஜேந்திரன், வசந்தா,சாந்தி,மைதிலி,ஜாஹீர்,தேவகி,  முனியம்மாள்  மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ஆளவந்தான் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்தக் கூட்டத்தின் வாயிலாக தாமரைக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் சார்ந்த  குறைகளை கண்டிப்பாக நிறைவேற்றி தருவதாக பேரூராட்சி தலைவர் பால்பாண்டி  தெரிவித்தார்.