தூசு தட்டப்படும் அருண்விஜய்யின் ‘பார்டர்’ ரிலீஸ்… எப்போது தெரியுமா?

0
168

தூசு தட்டப்படும் அருண்விஜய்யின் ‘பார்டர்’ ரிலீஸ்… எப்போது தெரியுமா?

அருண்விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கிய பார்டர் திரைப்படம் கடந்த ஆண்டே முடிந்த நிலையில் இன்னும் ரிலீஸாகாமல் உள்ளது.

பல ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அருண் விஜய். 90 களிலேயே அறிமுகம் ஆகி இருந்தாலும் சமீபத்தில் வெளியான தடையற தாக்க மற்றும் தடம் ஆகிய படங்களின் வெற்றிதான் அவரைக் கவனிக்க வைக்கும் நடிகராக்கியது.  இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவர் நடித்த வில்லன் கதாபாத்திரமான விக்டர் அவருக்கு வெகுவாகப் பாராட்டுகளைப் பெற்றுத்தந்தது.

இதையடுத்து குற்றம் 23 என்ற வெற்றிப்படம் கொடுத்த அருண் விஜய் – அறிவழகன் கூட்டணி மீண்டும் ‘பார்டர்’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. இந்த படம் கடந்த ஆண்டே முடிந்தாலும், கொரோனா தொற்று மற்றும் பைனான்ஸ் பிரச்சனைகளால் ரிலீஸ் ஆகவில்லை. இதையடுத்து அருண் விஜய்யின் யானை திரைப்படம் ரிலீஸாகி வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்போது பார்டர் திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆக திட்டமிடப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அந்த தேதியில் ரிலீஸ் ஆக இருந்த விருமன் திரைப்படம் முன் தள்ளிப் போனதால் இப்போது அந்த தேதியில் பார்டர் திரைப்படம் ரிலீஸாக முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுவருவதாக சொல்லப்படுகிறது.

Previous article“இவர் ஒப்பனரா… உண்மையிலேயே புரியல…”அணியில் நடந்த மாற்றம் குறித்து முன்னாள் வீரரின் கருத்து
Next articleகாய்ச்சலுக்கான காரணங்கள்!!. அவற்றை சரி செய்ய உடனடியாக இதை செய்யுங்கள்!!!