பார்ட்னரின் சம்மதம் இன்றி ஆணுறையை அகற்றுவது குற்றம்… நீதிமன்றம் உத்தரவு!

0
208

பார்ட்னரின் சம்மதம் இன்றி ஆணுறையை அகற்றுவது குற்றம்… நீதிமன்றம் உத்தரவு!

கனடாவில் வழக்கு ஒன்றின் போது நீதிபதிகள் இந்த தீர்ப்பை அளித்துள்ளனர். இது இப்போது உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது.

உடலுறவின் போது இணையரின் சம்மதம் இன்றி ஆணுறையை அகற்றுவது குற்றமாக வகைப்படுத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆணுறை பயன்பாட்டு எதிர்ப்பு அதிகரிப்பு இருப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

உடலுறவின் போது இணையரின் வெளிப்படையான அனுமதியின்றி ஆணுறையை அகற்றுவது குற்றமாக வகைப்படுத்தப்படும் என கனடிய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2017ஆம் ஆண்டு ஆன்லைனில் சந்தித்த இருவர் நேரில் சந்தித்து தாங்கள் பாலியல் ரீதியாக ஒத்துப்போகிறார்களா என்று சரிபார்க்க முடிவு செய்த வழக்கு தொடர்பாக இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

உடலுறவின் போது ஆணுறை பயன்படுத்தப்பட வேண்டும் என்று பெண் ஆரம்பத்தில் வலியுறுத்தியுள்ளார். ஆனாலும் சம்மந்தப்பட்ட ஆண் ஆணுறை அணியவில்லை. இது பெண்ணுக்குத் தெரியாது, பின்னர் எச்ஐவி தடுப்பு சிகிச்சையை எடுத்துக் கொண்டார். பிரதிவாதி, ரோஸ் மெக்கென்சி கிர்க்பாட்ரிக், முதலில் பாலியல் வன்கொடுமை வழக்கில் பதிவு செய்யப்பட்டார். இது சம்மந்தமான வழக்கில்தான் நீதிமன்றம் தற்போது இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

Previous articleபணிபுரியும் பெண்களின் கவனத்திற்கு! மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!
Next articleஇவர்களுக்கு மட்டும் தான் சிலிண்டர் விலையில் மாற்றம்! எண்ணெய் நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி பட்டியல்!