விஜய்யின் வாரிசு தெலுங்கு வெர்ஷன் ரிலீஸில் சிக்கல்… ஓ இதுதான் காரணமா?

0
257

விஜய்யின் வாரிசு தெலுங்கு வெர்ஷன் ரிலீஸில் சிக்கல்… ஓ இதுதான் காரணமா?

விஜய்யின் வாரிசு திரைப்படம் தெலுங்கில் ‘வார்சாடு’ என்ற பெயரில் உருவாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் விஜய்யை இயக்க காத்திருக்க, அவர் இப்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வரும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். இதனால் தமிழ் தெலுங்கு என இருமொழிகளிலும் வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.

வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளுக்கு படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

இந்த திரைப்படம் குடும்ப உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. குடும்ப அரசியல் சம்மந்தப்பட்ட கதையாக செண்ட்டிமெண்ட்டுக்கு அதிக முக்கியத்துவம் உள்ள கதையாக  வாரிசு உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் விஜய்யின் தந்தையாக சரத்குமார் நடிக்கிறார்.

வாரிசு திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழில் ரிலீஸ் ஆகும் அதே நாளில் தெலுங்கில் ரிலீஸாகாது என சொல்லப்படுகிறது. ஏனென்றால் தெலுங்கில் பிரபாஸின் பிரம்மாண்ட திரைப்படமான ஆதிபுருஷ் சங்கராந்தியை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. அதனால் நான்கு நாட்கள் கழித்து வார்சாடு ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

Previous articleகூகுள் பே மூலம் பணம்! டோர் டெலிவரியில் கஞ்சா! கையும் களவுமாக சிக்கிய விநியோகிப்பாளர்கள்
Next articleகர்நாடகா டூ கன்னியாகுமரி …. ஒரு வழியாக பத்து தல ஷூட்டிங்கில் சிம்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here