இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்.!!எண்ணெய் விலை 10 ரூபாய் குறைப்பு!மானிய சிலிண்டர் விலையே இவ்வளவா?

0
169
Happy news for housewives. 10 rupees reduction in oil price! Is the subsidized cylinder price this much?
Happy news for housewives. 10 rupees reduction in oil price! Is the subsidized cylinder price this much?

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்.!!எண்ணெய் விலை 10 ரூபாய் குறைப்பு!மானிய சிலிண்டர் விலையே இவ்வளவா?

ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளே சமையல் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படுவது வழக்கமாக இருக்கும்.அதன்படி மாதத்தின் முதல் நாளான இன்று ஜூன் 1 சிலிண்டரின் விலையைப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்துள்ளது. இன்று 19 கிலோ எடை கொண்ட வர்த்தகப் பயன்பாட்டுக்கான விலை 135 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய விலை மாற்றத்தின் படி, டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.2,219 ஆக உள்ளது. இதற்கு முன்னர் சிலிண்டரின் விலை ரூ.2,355.50 ஆக இருந்தது.இந்நிலையில் மும்பையில் சிலிண்டரின் விலை ரூ.2,307லிருந்து ரூ.2,171.50 ஆகக் குறைந்துள்ளது.

கொல்கத்தாவில் சிலிண்டர் விலை ரூ.2,322 ஆக இருக்கிறது.சென்னையைப் பொறுத்தவரையில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் இன்று 2,373 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.வீட்டு உபயோகத்திர்க்காக 14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டரின் விலை டெல்லியில் 1,003 ஆக உள்ளது. பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் வாங்கியவர்களுக்கு மானியமாக 200 ரூபாய் கிடைக்கும்.

இதனைத்தொடர்ந்து அவர்கள் சிலிண்டருக்கு 803 ரூபாய் மட்டுமே செலவு செய்ய வேண்டியிருக்கும்.முன்னதாக கொரோனா பிரச்சினையைக் கருத்தில் கொண்டு 2020 ஜூன் மாதம் முதலே நிறையப் பேருக்கு சிலிண்டர் மானியம் வரவில்லை என புகார் எழுந்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் சிலிண்டரின் முழு விலையையும் கொடுத்தே வாங்க வேண்டியிருக்கும் அவலம் ஏற்பட்டியிருக்கிறது.

இந்நிலையில் தற்போது சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாதத்திலும் சிலிண்டர் விலை இரண்டு முறை மாற்றியமைக்கப்படுகிறது.

அதன்படி மாதத்தின் முதல் நாளான இன்று வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்ட நிலையில், மாதத்தின் மத்தியில் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைவார்கள் என கூறப்படுகிறது.

Previous articleதிருப்பு முனையாக அமையுமா குருதி ஆட்டம்? நம்பிக்கையோடு காத்திருக்கும் அதர்வா!
Next articleநெல்லை மாவட்டத்தில் காரில் கைவரிசை காட்டிய வாலிபர்! போலீசார் விசாரணை!