இரண்டாவது டி 20 போட்டி… இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்த வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள்!

0
199

இரண்டாவது டி 20 போட்டி… இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்த வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள்!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 போட்டி நேற்று நடந்தது.

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது.

இதையடுத்து சில நாட்களுக்கு முன்னர் நடந்த இந்த முதல் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புகளுக்கு 190 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ரோஹித் ஷர்மா 64 ரன்கள் சேர்த்தார். கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 19 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இந்த போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் நேற்று இரண்டாவது டி 20 போட்டி நடந்த நிலையில் அதில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 138 ரன்கள் மட்டுமே சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் மெக்காய் 6 விக்கெட்களை வீழ்த்தி இந்திய பேட்டிங்கை நிலைகுலைய வைத்தார். இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19.2 ஓவர்களில் 141 ரன்கள் சேர்த்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன் செய்துள்ளது.

6 விக்கெட்கள் வீழ்த்திய மெக்காய் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Previous articleஅட்ரா சக்க..இந்த ஆப் உடனே உங்க போன்களில் மறக்காம பதிவிறக்கம் செய்யுங்கள்!..அப்புறம் நீங்களே விடமாட்டிங்க!..
Next article“அல் கொய்தா தலைவர் கொல்லப்பட்டார்…” அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here