“தோல்விக்கு காரணம் இதுதான்…” கேப்டன் ரோஹித் ஷர்மா ஓபன் டாக்!

0
157

“தோல்விக்கு காரணம் இதுதான்…” கேப்டன் ரோஹித் ஷர்மா ஓபன் டாக்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் இந்திய அணி தோல்வி பற்றி கேப்டன் ரோஹித் ஷர்மா பேசியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து நடந்த முதல் டி 20 போட்டியிலும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் நேற்று இரண்டாவது டி 20 போட்டி நடந்த நிலையில் அதில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 138 ரன்கள் மட்டுமே சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் மெக்காய் 6 விக்கெட்களை வீழ்த்தி இந்திய பேட்டிங்கை நிலைகுலைய வைத்தார். இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19.2 ஓவர்களில் 141 ரன்கள் சேர்த்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன் செய்துள்ளது.

தோல்வி பற்றி பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா “முதலில், நாங்கள் போதுமான ரன்கள் சேர்க்கவில்லை. நாங்கள் நன்றாக பேட் செய்யவில்லை. ஆடுகளம் நன்றாக இருந்தது. ஆனால் நாங்கள் அதைப் பயன்படுத்தவில்லை. நீங்கள் ஒரு பேட்டிங் குழுவாக ஏதாவது செய்யும்போது, ​​நீங்கள் சிலநேரம் வெற்றியடையாமல் போகலாம். ஆனால் இதிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்வோம். புவனேஸ்வர் குமார் நமக்காக என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்பது நமக்குத் தெரியும்; அவர் அதை பல ஆண்டுகளாக செய்து வருகிறார். அவேஷ் மற்றும் அர்ஷ்தீப் போன்றவர்களுக்கு நீங்கள் வாய்ப்புகளை வழங்கினால்தான் அவர்களும் அனுபவம் பெறுவார்கள்.

அவர்களிடம் திறமைகள் உள்ளன. அது அவர்களுக்கு ஆதரவளிப்பதாகும். பந்து வீச்சாளர்கள் மற்றும் அணிக்காக நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். இது போன்ற இலக்குகள் 13-14 ஓவர்களில் முடிந்துவிடும் ஆனால் நாங்கள் அதை கடைசி ஓவர் வரை இழுத்தோம். எங்கள் பேட்டிங்கில் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். நாங்கள் பீதி அடைய மாட்டோம். ஒரு தோல்விக்குப் பிறகு எதையும் மாற்ற மாட்டோம்.” எனக் கூறியுள்ளார்.

Previous articleவேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் சம்பளம் ரத்து! போக்குவரத்து கழகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
Next articleதிரைப்பட தயாரிப்பாளர் அன்பு செழியன் வீட்டில் திடீர் ஐ.டி ரெய்டு? சோதனையின் போது அவர் அங்கு இல்லையா?..