கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்தில் சென்ற பெண்ணின் நகை திருட்டு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

0
242
A woman's jewelery was stolen from a bus in Kanyakumari district! People in the area in fear!
A woman's jewelery was stolen from a bus in Kanyakumari district! People in the area in fear!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்தில் சென்ற பெண்ணின் நகை திருட்டு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் அருகே உள்ள கொற்றியோடு கன்றுபிலாவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் ராஜ் (46). இவரதின் மனைவி எல்சிபாய் (42). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அவர் லட்சுமிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று கல்லூரியின் முதல் நாள் என்பதால் காலையில் எல்சிபாய் அவருடைய மகனை கல்லூரியில் விடுவதற்காக சென்றுள்ளார்.

மேலும் அவரது மகனை கல்லூரியில் விட்ட பிறகு வீட்டிற்கு செல்வதற்காக மண்டைக்காட்டில் இருந்து திங்கள் நகர் வழியாக  வரும் பேருந்தில்  சென்று கொண்டிருந்தார். அப்போது திங்கள் நகர் பஸ் நிலையம் வந்ததும் எல்சிபாய் இறங்கிய போது அவரது கழுத்தில் இருந்த ஐந்தரை பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த எழுச்சிபாய் இரணியல்  போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் இரணியல்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்தில் சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலி காணாமல் போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleதூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ்ச்சிக்கு சென்று வந்த தம்பதிக்கு நேர்ந்த சோகம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!
Next articleதஞ்சாவூர் மாவட்டத்தில் 500 ரூபாய்காக இருவர் தாக்கி கொண்ட சம்பவம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here