கரு கலைப்பால் பெண் உயிரிழந்த சம்பவம்! அதிரடி நடவடிக்கையாக மருத்துவமனைக்கு சீல்!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குவாடு கிராமத்தை சேர்ந்த பெண்மணி தான் பெரியநாயகம். இவருக்கு 37 வயதாகிறது. இவர் கருவுற்று இருந்துள்ளார். கருவை கலைப்பதற்காக தியாகதுருக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவருக்கு நேற்று கருக்கலைப்பு செய்யப்பட்டது. கருக்கலைப்பில் பெண்மணிக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாததால் திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
அப்பெண் உயிரிழந்ததையடுத்து மருத்துவமனையயை அவரது உறவினர்கள் முற்றுகையிட்டனர்.உடனடியாக போலீசார் மருத்துவமனைக்கு வந்து ஆரப்பட்டம் நடக்காதவாறு தடுத்தனர்.அதனால் அப்பகுதி நேற்று பரபரப்பாகவே காணப்பட்டது. மேலும் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்தோடு மருத்துவமனை மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவ்வாறு விசாரணை நடத்தி வந்ததில் அப்பெண்மணிக்கு சரியான சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்தது தெரியவந்தது. அதனால் அந்த தனியார் மருத்துவமனை மேல் நடவடிக்கை எடுத்து இன்று சீல் வைத்தனர்.