Breaking News, Crime, District News, News, State

மீண்டும் வெளியான சிசிடிவி காட்சிகள்:! ஸ்ரீமதி இறப்பில் நீட்டிக்கும் மர்மம்!!

Photo of author

By Pavithra

மீண்டும் வெளியான சிசிடிவி காட்சிகள்:! ஸ்ரீமதி இறப்பில் நீட்டிக்கும் மர்மம்!!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் இவருடைய மகள் ஸ்ரீமதி 17 வயது மதிக்கத்தக்க இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் இயங்கி வரும் சக்தி தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.இதற்கு நடுவே கடந்த 13ஆம் தேதி விடுதியில் இருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

பள்ளியின் நிர்வாக தரப்பிலிருந்து ஸ்ரீமதி 3வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.ஆனாலும் இதனை அவருடைய பெற்றோர் ஏற்றுக்கொள்ள மறுத்து அவருடைய இறப்பில் மர்மம் இருப்பதாக தெரிவித்து போராட்டத்தை தொடங்கினார்கள். மேலும் ஸ்ரீமதிக்கு நியாம் கேட்டு கடந்த 17ஆம் தேதி பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்கள் நடத்திய போராட்டம் மிகப்பெரிய கலவரத்தில் முடிவடைந்தது.இதைத்தொடர்ந்து ஸ்ரீமதியின் பெற்றோர்கள் மீண்டும் ஸ்ரீமதியின் உடலை மறு கூறாய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் இந்த வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஜூலை மாதம் 19 ஆம் தேதி உடல் மீண்டும் மருகூறாய்வு செய்யப்பட்டு ஜூலை 23ஆம் தேதி ஸ்ரீமதின் உடல் அவரது சொந்த கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதற்கிடையில் ஸ்ரீமதி தொடர்பான பல்வேறு சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியான நிலையில், மீண்டும் தற்போது ஒரு சிசிடிவி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.அந்த வீடியோவில் பள்ளி வளாகத்தில் இருந்து மாணவியின் சடலத்தை தூக்கி செல்வது போல் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், இந்த வீடியோவை வெளியிட்டது யாரென்று காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

இந்த செடிகள் உங்கள் வீட்டில் உள்ளதா?உடனே வேரோடு புடுங்கி எரியுங்கள்!.

இதனை செய்தால் முழங்கால் வலி எப்பொழுதுமே வராது! முழு விவரங்கள் இதோ!

Leave a Comment