இந்த திட்டத்திற்கு 82000 ஆயிரம் பெண்கள் போட்டி! மத்திய அரசு வியப்பில் உள்ளது !
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்தது . இந்த திட்டத்தை கைவிடவேண்டும் என எதிர்கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தி வந்த நிலையில் இந்த திட்டத்தை கைவிட முடியாது என்றும் ஒன்றிய அரசு திட்டவட்டமாக தெரிவித்தனர்.
அக்னிபத் திட்டத்தில் முதலில் ஆறு மாத காலம் பயிற்சி காலமாக கருதப்படும். மீதமுள்ள மூன்றரை ஆண்டுகள் பணியாற்றிய பிறகு 25 சதவீத வீரர்கள் மட்டுமே தொடர்ந்து பணியாற்ற முடியும். மீதமுள்ள 75 சதவீத வீரர்கள் சேவா நிதி வழங்கி வீட்டிற்கு திரும்ப அனுப்பப்படுவார்கள் எனவும் தெரிவித்தனர்.
மேலும் தொடர்ந்து பணியாற்ற விருப்பமுள்ள வீரர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்நிலையில் அக்னி வீரர்களுக்கு பல்வேறு சலுகையும் தொடர்ந்து அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விமானப்படைக்கான அக்னி வீரர்களுக்கு தேர்வுக்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி தொடங்கிய நிலையில் ராணுவம் கடற்படைக்கான அக்னி வீரர்களுக்கான தேர்விற்கு ஆன்லைன் முன்பதிவு ஜூலை 1 முதல் தொடங்கப்பட்டது.
மேலும் ஜூலை 1ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் இந்திய விமானப்படையில் சுமார் 3,000 மேற்பட்ட பணியிடங்களுக்கு 7,50,000 பேர் விண்ணப்பத்துள்ளனர். 3000 படைகளுக்கு சுமார் ஒன்பது லட்சத்து 55 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மேலும் அந்த விண்ணப்பித்தவர்களில் பெண்கள் 82 ஆயிரத்து 200 பேர் என்ன பித்துள்ளனர் எனவும் கடற்பறை அதிகாரிகள் கூறுகின்றார்கள். இந்நிலையில் பெண்கள் அதிக அளவில் விண்ணப்பித்தது வியப்பாக இருக்கிறது எனவும் ஒன்றிய அரசு சார்பில் கூறப்படுகிறது.