தொடரும் கனமழை! இன்று எங்கெல்லாம் விடுமுறை?

0
105

தமிழகத்தில் நிலை வரும் மணிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

அதாவது திருப்பூர், திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் அதிக கன மழை வரையிலும் விருதுநகர் ,தென்காசி, ஈரோடு, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை செய்வதற்கான வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

அதேபோல ராணிப்பேட்டை, வேலூர், திருநெல்வேலி, மதுரை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, நாமக்கல், போன்ற மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழையும் பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ஆகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு சில கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அந்த விதத்தில் கொடைக்கானலில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் சிறுமலை பகுதியிலிருக்கின்ற பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை என ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை பகுதியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதே சமயம் மழை தொடர்ந்து வருவதால் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் காயத்ரி கிருஷ்ணன் அறிவித்திருக்கிறார்.