மீண்டும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை:! இதுதான் காரணம்!!
ஈரோடு அருகே பத்தாம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி.
ஈரோடு அருகே மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் பெற்றோர்கள் அவரை கண்டித்துள்ளனர்.மேலும் டிவி பார்க்க கூடாது என்றும் கண்டித்துள்ளனர்.இதனால் சில நாட்களாக மனம் உளச்சலில் இருந்த மாணவி கடந்த 1-ம் தேதியன்று எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இதன் காரணமாக மருத்துவமனையில் கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மாணவி தற்போது சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இதனைக் குறித்து அப்பகுதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாணவி தற்கொலை செய்து கொண்டது பெற்றோர் திட்டியதால்தானா ? அல்லது வேறு ஏதோ காரணமா? என்ற கோணத்தில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
சில நாட்களாக பள்ளி மாணவிகள் அதிகமாக தற்கொலை செய்து வரும் நிலையில் தற்போது இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.