தொடர் கனமழை காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு! மாவட்ட ஆட்சியாளர்களுடன் முதலமைச்சர் திடீர் ஆலோசனை!

0
62

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பருவமழை தொடங்கி அதன் காரணமாக, மழை பெய்து வருவதால் காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதோடு ஒகேனக்கல் காவிரி கரையில் தாழ்வான பகுதிகளில் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. ஆகவே ஊட்டமலை சத்திரம், நாடார் கொட்டாய், போன்ற காவிரி கரையோர பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறார்கள்.

காவிரி கரையோர மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசித்து வருபவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். அதோடு தண்டோரா மூலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ஆபத்தை விளைவிக்கும் விதத்தில் நீர் நிலைகள் அருகில் செல்லவும், புகைப்படம் எடுக்கவும், தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே காவிரி கரையோர பகுதிகளில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி 14 மாவட்ட ஆட்சியாளர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனையை நடத்தினார். நாமக்கல், திருச்சி, சேலம், கரூர், போன்ற 14 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை செய்தார்.