உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி? உற்சாகத்தில் உடன்பிறப்புகள்

0
189
Announcement for Udhayanidhi Stalin as Deputy CM
Announcement for Udhayanidhi Stalin as Deputy CM

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி? உற்சாகத்தில் உடன்பிறப்புகள்

முன்னாள் முதல்வர் கருணாநிதி காலம் தொட்டே திமுக ஒரு குடும்ப கட்சி என்ற விமர்சனம் தமிழக அரசியலில் இருந்து வருகிறது.அந்த வகையில் தான் அவருடைய அரசியல் வாரிசாக ஸ்டாலின் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அந்த நேரத்தில் கூட கருணாநிதி அவர்களின் மூத்த மகனான அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் தான் தலைவர் பதவிக்கான போட்டி ஏற்பட்டது.

இந்நிலையில் அரசியல் வாரிசாக இருந்தாலும் தனக்கு நடிப்பது தான் வேலை என தமிழ் சினிமாவில்  நடிக்க ஆரம்பித்த உதயநிதி ஸ்டாலின் அவ்வப்போது தெரிவித்து வந்தார்.ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் இவர் தீவிரமாக ஈடுபட்ட போதே முழு நேர அரசியலுக்கு தயாராகி விட்டதாக திமுக வட்டாரத்தில் பேசப்பட்டது.

இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் முதல்வரின் மகன் என்பதால் வழக்கத்தை விட இவருக்கான முக்கியத்துவம் அதிகரித்தது.முதல்வருக்கு அடுத்து உதயநிதி தான் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நபர் என்ற போக்கு அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என அவரது நண்பரும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோரிக்கை வைத்தார்.

அவரைத்தொடர்ந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்ட திமுகவின் பல முக்கிய சீனியர் தலைவர்களும் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியானது.

அந்த அடிப்படையில் உதயநிதி ஸ்டாலின் எந்த நேரத்திலும் அமைச்சரவையில் இடம் பிடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் நிலவி வருகிறது.ஆனால் இவையனைத்தையும் கண்டு கொள்ளாமல் முதல்வர் ஸ்டாலின் மௌனம் காத்து வருகிறார்.

குறிப்பாக திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டே அமைச்சர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தது போல உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி எதுவும் வழங்கப்படவில்லை.

இது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் பலரும் கோரிக்கை வைத்திருந்தும் அவர் எந்த முடிவும் எடுக்காமல் அமைதி காத்து வருவது கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதே போல இது குறித்து கேள்வி எழுப்பும் போதெல்லாம் உதயநிதி ஸ்டாலினும் தலைமை எடுக்கும் முடிவே என மழுப்பல் பதிலை அளித்து வருகிறார்.

ஆனால் இந்தமுறை நிச்சயமாக உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என உடன்பிறப்புகள் பேசிக் கொள்கின்றனர்.அந்த வகையில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது

விரைவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதற்காக அறிவாலயத்தில் தீவிரமான ஏற்பாடு நடந்து வருகிறது. இதில் குறிப்பாக யாருடைய பதவியையாவது பறித்து உதயநிதிக்குதரலாமா? அல்லது இவருக்கென புதிய துறையை உருவாக்கலாமா என புரியாததால் திமுக தலைமை குழப்பத்தில் உள்ளது.

அந்தவகையில் ஓரிரு மாதங்கள் அமைச்சர்களின் செயல்பாடுகளை பார்த்துவிட்டு பதவியை பறித்து தருவதா? அல்லது புதிதாக ஒரு துறையை உருவாக்கி தருவதா? என்பதை முடிவு செய்வோம் என முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தை பெண்டிங்கில் வைத்துள்ளார் என திமுக உடன் பிறப்புகள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

Previous articleபட்டப்பகலில் கடைக்குள் புகுந்து கத்தி முனையை  காட்டி பணம் திருடு!.. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!…
Next articleசேலம் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பழைய பாலத்தின் மீது ஏறி ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுக்கும் இளைஞர்கள்!