விவசாய நிலத்தில் மண்ணில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை!.வெளிவரும் அதிர்ச்சி தகவல்..

0
184
Infant buried in soil in agricultural land! Shocking information coming out..
Infant buried in soil in agricultural land! Shocking information coming out..

விவசாய நிலத்தில் மண்ணில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை!.வெளிவரும் அதிர்ச்சி தகவல்..

குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்திலுள்ள கம்போய் கிராமத்தை சேர்ந்தவர் தான் இந்த கோகிலாபென்.இந்த பெண் தனது நிலத்தில்  விவசாயம் செய்து வருகிறார். விவசாயியான இவர் தனது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது.

இந்நிலையில் குழந்தையின் அழுகை சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது.அப்போது அந்த பெண் சத்தம் கேட்ட இடத்தை தேடி சென்றுள்ளார். அங்கு சென்று அவர் பார்த்த போது மண்ணுக்குள் இருந்து குழந்தையின் அழுகை சத்தம் வந்துள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அருகிலுள்ள மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அங்கு வந்த ஊழியர்கள் அழுகை சத்தம் கேட்கும் இடத்தை தோண்டினர். அதில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை புதைக்கப்பட்டு இருந்தது. உடனடியாக குழந்தையை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும்  குழந்தையின் பெற்றோரையும் தேடி வருகின்றனர். பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் மக்களிடையே  பரபரப்பை பெரும்  ஏற்படுத்தியுள்ளது.

Previous articleசேலம் மாவட்டத்தில் தலைவாசல் பகுதியில் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்! காரணம் இதுதான்!
Next articleகல்லூரி பேராசிரியருக்கு நடந்த சோகம்:! காதலை பெற்றோரிடம் சொன்னதால் ஏற்பட்ட விபரீதம்!!