பள்ளி தொடர்பாக முக்கிய  தகவல் !..மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!..

0
153
Important information regarding the school!..Notification published by the central government!..
Important information regarding the school!..Notification published by the central government!..

பள்ளி தொடர்பாக முக்கிய  தகவல் !..மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!..

கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.இதன் காரணமாக மாணவர்களின்  நலனை கருதி தமிழக அரசு ஆன்லைன் வகுப்பு மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டது.கொரோனா பரவலை தொடர்ந்து பள்ளிகளில் படித்து வந்த மாணவர் மற்றும் மாணவிகள் இடையில் நிற்கும் நிலை அதிகரித்துள்ளதா?

என்று பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர் தரப்பில் எழுத்துப்பூர்வ கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மந்திரி ஸ்மிருதி இரானி, நாடு முழுவதும் உள்ள ஆரம்ப பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலைகளிலும் பள்ளி மாணவர்களின் இடையில் நிற்கும் விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மத்திய கல்வி அமைச்சகம் வழங்கிய தகவலின் படி ஆரம்ப பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலைகளிலும் இடைநிற்றல் விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது என அவர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.மேலும்  மாணவர் மற்றும் மாணவிகள்  ஆர்வமாக கல்வியை கற்பித்து வருகிறார்கள். அதனால்  மாணவர்கள் இடையில் நிற்கும் நிலை சற்று குறைய தொடங்கியுள்ளது.

Previous articleஇந்த நிறுவனங்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி இல்லை! நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு!
Next articleமத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் அவகாசம்! தேவலாயங்கள் மீது தாக்குதலா?