ஆசைக்கு அழைத்த கணவனை ஆசிட்டில் மிளகாய் பொடியை கலந்து ஊற்றி ஓட்டம் பிடித்த குடும்ப பெண்!..
உத்தர பிரதேச மாநிலத்தில் பரெய்லி பகுதியை சேர்ந்தவர்கள் முகமது யாசின்.இவரது மனைவி ஃபர்ஹா தம்பதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.இருவரும் தன் வாழ்க்கையை சந்தோசமாக தான் தொடங்கினார்கள்.
காலம் செல்ல செல்ல இருவருக்கும் கருத்து வேறுபாடு அதிகம் ஏற்பட்டது.கணவன் மனம் இரங்கி வந்துள்ளார்.அதனையடுத்து மனைவியிடம் பாலியல் சீண்டலை கொடுத்து வந்தார்.சம்பவத்தன்று யாசின் மது அருந்திவிட்டு தனது மனைவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளாதாக தெரிகிறது.
மனைவியோ அதற்கு மறுத்த நிலையில் கணவன் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த மனைவி யாசின் தூங்கிக்கொண்டிருந்தபோது கழிவறையை சுத்தம் செய்ய வைத்திருந்த ஆசிட்டில் மிளகாய் பொடியை கலந்து அவர் மீது ஊற்றியுள்ளார்.
பிறகு அந்த இடத்திலிருந்து தனது மகளை அழைத்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளார். இதனிடையே யாசினின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இதையடுத்து காவல்துறையினர் தப்பிசென்ற அவரது மனைவி ஃபர்ஹாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.