முகச்சுருக்கத்தை தடுக்கும் கேரட்! முழு விவரங்கள் இதோ!    

0
243

முகச்சுருக்கத்தை தடுக்கும் கேரட்! முழு விவரங்கள் இதோ!

பெண்கள் எப்பொழுதும் அதிக அளவில் நினைத்து கவலைப்படும் விஷயம் முகத்தில் உள்ள கரும்புள்ளி முகப்பரு முகச்சுருக்கம் கருவளையம் போன்றவை பற்றி தான் அந்த வகையில் கேரட்டை பயன்படுத்தி இந்த அனைத்து பிரச்சனைகளும் தீர்வு காண்பதை பற்றியும் நாம் அறிந்து கொள்ளலாம்.

செய்முறை:முதலில் இரண்டு கேரட்டை எடுத்து அதனை வேக வைத்து, மசித்து, முகத்திற்கு தடவ வேண்டும். பின்னர் அதனை காய வைத்து, முகத்தில் இருந்து உரித்து எடுக்க வேண்டும். அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்திற்கு ஒத்தடம் தர வேண்டும்.

மேலும் இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்தால், முகம் நன்கு பொன்னிறமாக மின்னும். கேரட்டில் சர்க்கரை சேர்த்து, நன்கு நைஸாகவும், கெட்டியாகவும் அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை முகத்திற்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், முகத்திற்கு சரியான இரத்த ஓட்டம் இருக்கும்.

 

மேலும் இதில் இருக்கும் பொட்டாசியம், முகத்தில் இருக்கும் இறந்த செல்கள், முகப்பரு, கரும்புள்ளி மற்றும் மற்ற சரும நோய்களை நீக்கி, சருமத்தை மென்மையாக அழகாக வைக்கும்.

மேலும் தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸை பருகினால், சருமத்தில் எந்த நோயும் ஏற்படாமல் இருக்கும். அதுமட்டுமல்லாமல், முகச்சுருக்கம் ஏற்படுவதை தடுக்கும்.

மேலும் சம அளவு கேரட் சாறு, ஆரஞ்சு பழச்சாறு, எலுமிச்சை பழச்சாறு மற்றும் பன்னீர் ஆகியவற்றை எடுத்து அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும். கொதிக்க வைத்த கேரட் சாறினை ஆறிய பின் முகத்திலும், உடம்பிலும் தேய்த்துக் குளிக்க, முகமும், தேகமும் பளபளபாகும்.

 

Previous articleஇவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்வதால்!… செல்வம் பெருகும் நம் துன்பம் மனக்கவலை நீங்குமாம்?.
Next articleஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here