சாமிகிட்ட உத்தரவு வாங்கி உண்டியலை ஆட்டைய போட்ட ஆசாமி! வைரலாகும் சிசிடிவி வீடியோ!
மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள ஜபல்பூர்நகரில் சுகா என்கிற கிராமத்தில் பெண் தெய்வத்திற்கான அம்மன் கோவில் ஒன்றுள்ளது.புண்ணியம் வாய்ந்த இக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய பல பக்தர்கள் வந்து செல்வார்கள்.அப்போது சில பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் பணம் செலுத்தி விட்டு போவதுண்டு.
செல்வம் நிறைந்த கோவில் என்பதால் அந்த உண்டியல் பணம் நிரம்பி இருந்துள்ளது. இதனை அறிந்த திருடன் ஒருவன் கோவிலுக்கு வரும்போதெல்லாம் அந்த பணம் நிரந்த உண்டியலை நோட்டம் போட்திருந்தார்.இந்நிலையில் தான் நேற்றிரவு முகமூடி அணிந்து கொண்டு கோவிலுக்கு திருடச் சென்றுள்ளார்.
உண்டியலில் திருடுவதற்கு முன் அம்மனை பார்த்து தன் இருகைகளையும் தூக்கி கும்பிட்டு விட்டு தனது வேலையை செய்ய தொடங்கினார் அந்த மூகமுடி திருடன்.பிறகு உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தையும் மற்றும் அம்மன் அணிந்திருக்கும் நகைகளை திருடியுள்ளார்.இந்த காட்சி அம்மன் சன்னதியில் வைத்திருக்கும் சிசிடிவியில் பதிவாகயுள்ளது.
மீண்டும் காலையில் வழக்கம்போல் அம்மனை பூஜை செய்ய வரும் குருக்கர் பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.தகவலின் பேரில் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.மேலும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சி உதவியுடன் திருடனை தேடி வருகின்றார்கள்.
இந்நிலையில் சமூக ஊடகங்களில் ஒரு நபர் விமர்சனம் செய்துள்ளார்.அதில் கோவில் கருவறையிலிருந்து பக்தர் ஒருவர் திருடி சென்றார் என்றார் அது திருட்டு ஆகாது,தன்னுடைய கடின சூழலில், அந்த பக்தர் இறைவனிடம் உதவி கேட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
அதில் மற்றொருவர் அந்த திருடர் ஒரே நேரத்தில் தனது இறை நம்பிக்கையை உயிரோட்டத்துடன் வைத்து கொண்டதுடன் தனது தொழிலையும் செய்து இரட்டை பலன்களை பெற்றுள்ளார் என தெரிவித்துள்ளார்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.